4 elephant tusks seized; 7 people arrested: ஈரோடு அருகே 4 யானை தந்தம் பறிமுதல்; 7 பேர் கைது

ஈரோடு: Police arrested 7 people for hoarding 4 elephant tusks near Erode.: ஈரோடு அருகே 4 யானை தந்தங்களை பதுக்கியதாக 7 பேரை போலீசார் கைது செய்தனர்.

ஈரோடு மாவட்டம், அந்தியூர், பர்கூர் வனப்பகுதிகளுக்கு அருகே உள்ள கிராமங்களில் யானைத் தந்தங்கள் பதுக்கி வைத்திருப்பதாக பர்கூர் மலைப்பகுதி மாவோயிஸ்ட் போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. தகவலின்பேரில், அந்தியூர் அடுத்த சந்திபாளையம் ராமசாமி தோட்டத்தில் போலீசார் சோதனையிட்டனர். அப்போது தென்னை மட்டைகளுக்கு நடுவே 3 யானை தந்தங்கள் மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. அதனை போலீசார் பறிமுதல் செய்தனர்.

இதனை பதுக்கியதாக சந்திபாளையம் நடுவூர் பகுதியைச் சேர்ந்த ராமசாமி (40), புதுக்காடு பகுதியைச் சேர்ந்த வரதராஜன் (47), பழைய பழைய பாளையம் பிரபு குமார் (37), வாணிபுத்தூர் கெம்பனூர் ஊராளி குமாரசாமி (50), கிருஷ்ணகிரி காமராஜ் நகர் பகுதி சேர்ந்த விஜயகுமார் (33), திருப்பூர் கணபதிபாளையம் முருகப்பசெட்டியார் காலனி பகுதியைச் சேர்ந்த ரஞ்சித் (33), ஆகிய 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

இதில் தலைமறைவான பர்கூர் மலைப்பகுதி பெஜில்பாளையத்தைச் சேர்ந்த சித்தேஷ், முருகன் ஆகிய ஆகிய இருவரையும் போலீசார் மற்றும் வனத்துறையினர் தேடி வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட யானைத் தந்தங்கள் மற்றும் குற்றவாளிகளை அந்தியூர் வனச்சரகர் உத்தரசாமியிடம் போலீசார் ஒப்படைத்தனர்.

இதேபோல்,‌ பர்கூர் மலைப்பகுதி அருகே உள்ள பெரியூரில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த ஒன்னரையடி நீளமுள்ள ஒரு யானை தந்தம் கண்டுபிடிக்கப்பட்டது. இதனைப் பதிக்க வைத்திருந்ததாக பெரியூர் நாகன்(35) ‌ கைது செய்யப்பட்டார். மேலும் இதில் முக்கிய குற்றவாளியான பெரியூர் மாதேவன்(37) என்பவரையும் போலீசார் தேடி வருகின்றனர். இதில் பிடிபட்ட யானை தந்தம் மற்றும் குற்றவாளியை பர்கூர் ரேஞ்சர் பிரசாந்குமாரிடம் போலீசார் ஒப்படைத்தனர்.

பர்கூர் மலைப்பகுதி மாவோயிஸ்ட் போலீஸாரால் ஏற்கனவே கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு இரண்டு ஜோடி யானை தந்தங்கள் மற்றும் ஐந்து பேர் கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது மேலும் 4 யானை தந்தங்கள், 7 பேர் கைது செய்யப்பட்டு அந்தியூர், பர்கூர் வனச்சரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.