India will play with Zimbabwe : ஒரு நாள் தொடரில் ஜிம்பாப்வேவுடன் விளையாட உள்ளது இந்தியா

தில்லி: Indian team play with Zimbabwe in an ODI series : அடுத்த மாதம் ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் ஜிம்பாப்வே அணியுடன், இந்திய அணி விளையாட உள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அண்மையில் இந்திய அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, அந்த நாட்டின் அணியுடன் விளையாடியது. இதனைத் தொடர்ந்து மேற்கு இந்திய தீவுகளில் (West Indies) இந்திய அணி சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ளது.

இந்த சுற்றுப்பயணத்தில் 3 ஒரு நாள், 5 டி20, ஆட்டங்களில் விளையாட உள்ளது. இதனைத் தொடர்ந்து ஆகஸ்ட் மாதத்தில் ஜிம்பாப்வே (Zimbabwe) அணியுடன் ஒரு நாள் தொடரில் விளையாட உள்ளது. தற்போது அறிவித்துள்ள அறிவிப்பின்படி, ஆக. 18, 20, 22-ஆம் தேதிகளில் ஒரு நாள் தொடரில் இந்திய அணி விளையாட உள்ளது.

இந்தத் தொடரில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்க இந்திய கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது. இந்தத் தொடரில் இந்திய அணியின் பயிற்சியாளராக விவிஎஸ் லட்சுமணன் (VVS Lakshmanan) இருப்பார் என கூறப்படுகிறது.

அண்மையில் இங்கிலாந்தில் நடைபெற ஒரு நாள் மற்றும் டி 20 கிரிக்கெட் போட்டிகளில் இளம் வீரர்களை கொண்டு விளையாடிய இந்திய அணி சிறப்பாக விளையாடி (Indian team played well) தொடர்களை கைப்பற்றியதால், ஜிம்பாப்வேக்கு எதிரான தொடரிலும் அதிக அளவில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.