Siddharth-Aditi Rao new couple: புதிய காதல் ஜோடிகளாக வலம் வரும் சித்தார்த்- அதிதி ராவ்

சென்னை: Siddharth-Aditi Rao new couple: திரையுலகின் புதிய காதல் ஜோடிகளாக நடிகர் சித்தார்த்- நடிகை அதிதி ராவ் வலம் வருவது வைரலாகியுள்ளது.

நடிகர் சித்தார்த் (Actor Siddharth) பின்னணிப் பாடகர் மற்றும் திரைக்கதை எழுத்தாளரும் ஆவார். சென்னையில் பிறந்த இவர், முதல் படமான ‘பாய்ஸ்’ திரைப்படத்தில் கதாநாயகனாக மட்டுமில்லாமல் உதவி இயக்குநராகவும் பணிபுரிந்தார்.

தமிழில் (Tamil Cinema) கன்னத்தில் முத்தமிட்டால், ஆய்த எழுத்து, தீயா வேலை செய்யணும் குமாரு, ஜிகர்தண்டா, காவியத் தலைவன், அவள் போன்ற படங்களில் நடித்துள்ளார். மேலும் சந்தோஷ் சுப்ரமணியம் படத்தில் அடடா அடடா என்ற பாடலையும், காதலில் சொதப்புவது எப்படி என்ற படத்தில் பார்வதி பார்வதி, ஆனந்த ஜல்தோசம் பாடல்களை பாடியுள்ளார். இது தவிர தெலுங்கு (Tollywood) மற்றும் இந்தி (Bollywood) படங்களிலும் நடித்தது மட்டுமல்லாமல் பாடல்களையும் பாடியுள்ளார்.

திரைத்துறையில் மிகவும் பிரபலமான நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் சித்தார்த், படங்களை தவிர்த்து சமுக கருத்துகளை கூறி சர்ச்சையிலும் சிக்கி வந்தார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன் நடிகை சமந்தாவுடன் (Actress Samanth) டேட்டிங்கில் இருந்த நிலையில் சில காரணங்களால் இருவரும் பிரிந்தனர்.

இந்த நிலையில் நடிகர் சித்தார்த், கடைசியாக மஹா சமுத்திரம் (Maha Samuthiram) திரைப்படத்தில் நடித்திருந்தார். இதில் அவருக்கு ஜோடியாக நடிகை அதிதி ராவ் ஹைதாரி (Actress Aditi Rao) நடித்த்துள்ளார். இந்த படத்தை தொடர்ந்து இருவரும் பல இடங்களுக்கும் ஜோடியாக சுற்றித்திரிந்து வருகின்றனர். மேலும் இருவரும் டேட்டிங் செய்து வருவதாக செய்திகள் பரவியது.

சமீபத்தில் இருவரும் சலூன் ஒன்றிற்கு சென்ற நிலையில், பத்திரிகையாளர் அவர்களை சுற்றி புகைப்படம் எடுத்துள்ளனர். கோபடைந்த சித்தார் பத்திரிகையாளர்களை பார்த்து சத்தம் போட்டுள்ளார். இந்த சம்பவத்தோடு, சித்தார்த்துடன் அதிதி (Romantic Couple) டேட்டிங் செய்தியும் வைரலாக பரவி வருகிறது.