SP Balasubrahmanyam : பாடும் நிலா எஸ்.பி.பாலசுப்ரமணியம் திருமணத்திற்குப் பின்னால் ஒரு சுவாரஸ்யமான கதை உள்ளது

Balasubrahmanyam married Savitri : பெற்றோரின் எதிர்ப்பை மீறி எப்படி திருமணம் செய்து கொள்வது என சாவித்திரி மற்றும் எஸ்பிபி இருவரும் கவலைப்பட்டனர்.

SP Balasubrahmanyam: இசை உலகின் மந்திரவாதி எஸ்.பி.பாலசுப்ரமணியம். பல மொழிகளில் பாடி, அனைவரின் பாராட்டைப் பெற்ற‌ இந்த அற்புதத் திறமையாளர் நம்மை விட்டு பிரிந்து இரண்டு ஆண்டுகள் ஆகிறது.எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடுவதற்கு மட்டுமல்ல நடிப்புக்கும் பெயர் பெற்றவர். திரைப்படங்களில் துணை வேடங்களில் நடித்து வந்த எஸ்.பி.பாலசுப்ரமணியம், மற்ற புதிய பாடகர்களையும், இசை அமைப்பாளர்கள் பயன்படுத்திக் கொள்ள‌ ஈடுபடுத்திக் கொள்ள உத்வேகம் அளித்து வந்தார். அதுமட்டுமல்லாது எப்பொழுதும் புதிய முயற்சிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளும் சிறந்த மேதை எஸ்.பி.பாலசுப்ரமணியம். 1966 முதல் திரைப்படங்களில் பாடத் தொடங்கி, சுமார் 40 ஆயிரத்திற்கும் அதிகமான பாடல்களை 16 இந்திய மொழிகளில் பாடியுள்ளார். இவரை “பாடும் நிலா” என்று பலராலும் அழைக்கப்படுகிறார்.

எஸ்.பி.பாலசுப்ரமணியம் (SP Balasubrahmanyam) சினிமாவில் பல்வேறு வேடங்களில் நடித்து வந்தார். அவருடைய வாழ்க்கையும் சினிமா பாணியில் இருந்தது என்று கூறினால் அதில் தவறில்லை. இதற்கு ஒரு சிறந்த‌ உதாரணம் அவருடைய திருமணக் கதை. எஸ்பி பாலசுப்ரமணியம் சாவித்திரியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். சாவித்திரியும், பாலசுப்ரமணியமும் ஒருவரையொருவர் காதலித்து வந்த நிலையில், இரு வீட்டிலும் அவர்களது காதலுக்கு எதிர்ப்பு கிளம்பியது.

பெற்றோரின் எதிர்ப்பை மீறி எப்படி திருமணம் செய்வது என்று சாவித்திரி (Savitri) மற்றும் எஸ்பிபி இருவரும் கவலைப்பட்டனர். எஸ்பிபி பெங்களூரில் இருந்தார், அதே நேரத்தில் சாவித்ரியும் பெங்களூரில் இருந்த சகோதரர் வீட்டில் தங்கினர். இந்த வாய்ப்புக்காக காத்திருந்த எஸ்.பி.பி, சாவித்ரியை அங்கிருந்து கடத்திச் செல்ல முடிவு செய்தார்.

அவர்களது நண்பர்களான விட்டல் மற்றும் முரளி (Vittal and Murali)ஆகியோர் சகோதரர் வீட்டில் இருந்த‌ சாவித்திரியை சந்தித்து சிம்மாச்சலத்திற்கு வருமாறு வற்புறுத்தினர். இங்கே, எஸ்.பி.பி, மற்றும் சாவித்திரி திருமண வாழ்க்கையில் நுழைவதைக் காண பால‌சுப்ரமணியத்தின் நண்பர்கள் அனைவரும் அங்கு கூடி இருந்தனர். இப்படி பிள்ளைகள் ஓடிப்போய் திருமணம் செய்து கொண்டது இரு வீட்டாருக்கும் பிடிக்கவில்லை. இதனால், எஸ்பிபி தம்பதியினர் இரண்டு ஆண்டுகளாக பெற்றோரின் வெறுப்பை எதிர்கொண்டனர். எஸ்.பி.பி, அவர்களின் முதல் குழந்தை பிறந்த பிறகு இரு குடும்பத்தினரும் அவர்களை ஏற்றுக்கொண்டனர்.