Silk with 504 faces preparing for Tirupati: திருப்பதி ஏழுமலையானுக்கு தயாராகும் 504 முகங்களுடன் பட்டுச்சேலை

காஞ்சிபுரம் : Kanchipuram couple is designing a 504-faced silk dress to be worn for the Tirupati. திருப்பதி ஏழுமலையானுக்கு அணிவிக்க 504 முகங்களுடன் பட்டுச்சேலையை காஞ்சிபுரம் தம்பதி வடிவமைத்து வருகின்றனர்.

பட்டு சேலைகள் தயாரிப்பில் மிகவும் பிரபலமான காஞ்சிபுரம். மேலும் காஞ்சிபுரம் பட்டு புவியியல் சார்ந்த குறியீடாக மத்திய அரசால் 2005-06ல் அறிவிக்கபட்டது. பட்டுத்தொழிலில் ஏறத்தாழ 5,000 குடும்பங்கள் ஈடுபட்டு வருகின்றன.

காஞ்சிபுரம் நகரின் விளக்கொளிப் பெருமாள் கோயில் தோப்புத்தெருவில் வசித்து வருபவர் குமாரவேலு- கலையரசி தம்பதியினர். இவர்கள் காஞ்சிபுரம் பட்டுச்சேலையில் வாடிக்கையாளர் விரும்பும் தெய்வங்களின் உருவங்களை கணினியில் வடிவமைத்து கொடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில், சென்னையை சேர்ந்த வெங்கோபாஷா என்பவர் திருப்பதி ஏழுமலையானுக்கு பிரமோற்சவத்தன்று அணிவிப்பதற்காக அவரது முகங்களை சேலையின் உடலில் வடிவமைத்து தருமாறும், சேலை முந்தானையில் ஸ்ரீரங்கம் ரங்கநாதசுவாமியின் தோற்றத்தை வடிவமைக்குமாறும் தெரிவித்துள்ளனர்.

அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க, கடந்த 9 நாட்களாக குமாரவேலு- கலையரசி தம்பதியினர் விரதமிருந்து திருப்பதி ஏழுமலையானின் முகங்கள் 504 ஐ உடலிலும், ரங்கநாதரை சேலை முந்தானையிலும் வடிவமைத்து வருகின்றனர்.

சேலை பாடரில் இரு யானைகள் தும்பிக்கையை தூக்கி ஆசீர்வதிப்பது போன்று பட்டுச்சேலை காஞ்சிபுரத்தில் தயாரிக்கப்பட்டு வருகிறது. அரக்கு நிற பட்டுச்சேலையில் தயாராகும் இச்சேலையானது வரும் புரட்டாசி மாத பிரமோற்சவ விழாவில் திருப்பதி ஏழுமலையானுக்கு அணிவிக்கப்படவுள்ளது.

இது குறித்து குமாரவேல் கூறுகையில், நானும் எனது மனைவியும் கடந்த 9 நாட்களாக விரதமிருந்து இந்த பட்டுச் சேலையை வடிவமைத்து வருகிறோம். எங்களோடு மேலும் 4 பேர் இணைந்து இரவு பகலாக இச்சேலை தயாரிப்பில் ஈடுபட்டுள்ளோம். முதலில் கணினியில் தேவையான உருவத்தைக் கொண்டு வந்து பின்னர் சேலையில் வடிவமைப்போம்.வரும் திங்கள்கிழமை சேலை முழுவதுமாக தயாராகி உரியவரிடம் ஒப்படைக்கப்படும்.

அதனைத்தொடர்ந்து, பிரம்மோற்சவ விழாவில் இது ஏழுமலையானுக்கு அணிவிக்கப்படும். பட்டுச்சேலைகளில் சாதாரண வடிவங்களை விட ஏதையாவது வித்தியாசமாக செய்ய வேண்டும் என்ற ஆர்வமே இதுபோன்ற சேலை வடிவமைப்புக்கு காரணம் என்றார்.