SSC CGL Exam Free Coaching Class: மத்திய பணியாளர் தேர்வாணைய போட்டித்தேர்வுக்கு வரும் அக்.11ல் இலவச பயிற்சி வகுப்பு

சேலம்: Free coaching class on October 11 for the Central Staff Selection Commission exam. மத்திய பணியாளர் தேர்வாணைய போட்டித்தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ள மாவட்ட ஆட்சியர் அழைப்பு விடுத்துள்ளார்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் கார்மேகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்திய பணியாளர் தேர்வாணையத்தால் (SSC) 20,000-ற்கும் மேற்பட்ட குரூப் பி மற்றும் குரூப் சி ஆகிய பதவிகளுக்கான ஒருங்கிணைந்தப் பட்டப்படிப்பு அளவிலான பதவிகளுக்கான ஒருங்கிணைந்த பட்டப்படிப்பு அளவிலான (Combined Graduate Level) தேர்வுக்கான அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது. இத்தேர்வுக்கு ssc.nic.in என்ற இணையதளம் வாயிலாக 08.10.2022-க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

இத்தேர்விற்கான கல்வித்தகுதி குறைந்தபட்சம் ஏதாவது ஒரு பாடத்தில் அங்கீகரிக்கப்பட்ட பட்டப்படிப்புடன் 01.01.2022 அன்றைய நிலையில் எஸ்.சி, எஸ்டி பிரிவினர் 35 வயதுக்குள்ளும், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் 33 வயதுக்குள்ளும் மற்றும் பொதுப்பிரிவினர் 30 வயதுக்குள்ளும் இருத்தல் வேண்டும். மேலும், முன்னாள் இராணுவத்தினர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு நடைமுறைவிதிகளின் படி வயது வரம்பில் சலுகை வழங்கப்பட்டுள்ளது.

தேர்வுக் கட்டணமாக ரூபாய் 100/-நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதில் பெண்கள், எஸ்.சி, எஸ்.டி,வகுப்பினர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

சேலம் மாவட்டத்தைச் சார்ந்த தகுதியும் விருப்பமும் உள்ள பட்டதாரிகள் அதிக அளவில் இத்தேர்வுக்கு விண்ணப்பிக்கும் வகையில் சேலம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் சேவை மையம் (Facilitation Centre) அமைக்கப்பட்டுள்ளது. மேலும், இத்தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு 11.10.2022 அன்று இலவச பயிற்சி வகுப்புகள் துவங்கப்பட உள்ளன. மேலும், விவரங்களுக்கு 0427-2401750 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.

சேலம் மாவட்டத்தைச் சார்ந்த இளைஞர்கள் அதிக அளவில் இத்தேர்விற்கு விண்ணப்பித்து, இலவசப் பயிற்சி வகுப்பில் கலந்துகொண்டு பயன்பெறலாம். இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.