Shubman Gill : சச்சின் டென்டுல்கரின் சாதனை முறியடித்த ஷுப்மன் கில்

ஹராரே: Shubman Gill breaks Sachin Tendulkar’s record : ஜிம்பாப்வே எதிரான 3 வது ஒரு நாள் போட்டியில் சச்சின் டென்டுல்கரின் சாதனை ஷுப்மன் கில் முறியடித்தார்.

ஜிம்பாப்வெ நாட்டிற்கு எதிரான 3 வது ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி ஹராரேவில் திங்கள்கிழமை நடைபெற்றது (The 3rd ODI cricket match was held in Harare on Monday). இதில் இந்திய அணியின் சார்பில் விளையாடிய ஷுப்மன் கில், சச்சின் டென்டுல்கர் சாதனையை முறியடித்தார். இந்த போட்டியில் ஷுப்மன் கில் தனது முதல் சதத்தை அடித்தார். இந்த சதத்தின் மூலம் சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் ஜிம்பாப்வே எதிராக அதிக ரன்கள் எடுத்த இந்திய வீரர் என்ற புதிய சாதனையை படைத்தார். முன்னதாக இந்தியாவின் புகழ்பெற்ற கிரிக்கெட் வீரர் சச்சீன் டென்டுல்கர் 1998 ஆம் ஆண்டு 127 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்ததே சாதனையாக இருந்தது.

ஹராரேவில் திங்கள்கிழமை நடைபெற்ற ஜிம்பாப்வே எதிரான 3 வது ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் 13 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது (Indian team won by 13 runs). இந்த போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் இந்திய அணி 3-0 என்ற கணக்கில் ஜிம்பாப்வே எதிரான தொடரை முழுமையாக கைப்பற்றியது. முன்னதாக முதலில் பேட் செய்த இந்திய அணியில் ஹுப்மன் கில் சிறப்பாக விளையாடி, 15 பவுண்டரிகள், ஒரு சிக்ஸருடன் 130 ரன்கள் அடித்தார். ஷிகர் தவாண் 40 ரன்கள், கேப்டன் கே.எல்.ராகுல் 30 ரன்கள், இஷான் கிஷன் 50 ரன்கள், தீபக் ஹூடா 1 ரன், சஞ்சு சாம்சன் 15 ரன்கள் உள்பட எஞ்சிய வீரர்கள் எடுத்து ரன்களுடன் இந்திய அணியின் ஸ்கோர் 289 ரன்களாக இருந்தது. ஜிம்பாப்வே இந்த ஆட்டத்தில் 49.3 ஓவர்களில் 276 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது. இந்த ஆட்டத்தின் நாயகனாக மட்டுமின்றி, தொடரின் நாயகனாக‌ ஷுப்மன்கில் தேர்வு செய்யப்பட்டார்.

கே.எல். ராகுல் தலைமையிலான இந்திய அணி (KL Rahul led by Indian team ), 3 ஒரு நாள் கொண்ட இந்த தொடரை முழுமையாக வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் நடப்பு ஆண்டில் அதிக ஒரு நாள் கிரிக்கெட் தொடரை வென்ற சாதனையை இந்திய அணி படைத்துள்ளது. 3 ஒரு நாள் போட்டி தொடர்களை இந்திய அணி வென்றுள்ளது. இந்தியாவைத் தொடர்ந்து நியூசிலாந்து, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், அணிகள் 2 தொடர்களை முழுமையாக வென்று அடுத்த இடங்களில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. நிகழாண்டில், ரோஹித் சர்மா, கே.எல்.ராகுல் மற்றும் ஷிகர் தலைமையில் விளையாடிய இந்திய கிரிக்கெட் அணி பெரும்பாலான போட்டிகளை வென்று, சிறப்பாக விளையாடி வருகிறது. குறிப்பாக இளம் வீரர்கள் சிறப்பாக விளையாடி, அணியின் வெற்றிக்கு உதவி வருகின்றனர். இதில் தீபக் ஹூடா, ஷுப்மன்கில், சஞ்சு சாம்சன் உள்ளிட்ட இளம் வீரர்கள் சிறப்பாக விளையாடி வருகின்றனர்.