Delhi Deputy Chief Minister Manish Sisodia : ஆம் ஆத்மியை உடைத்தால் முதல்வர் பதவி தருவதாக பேரம்: தில்லி துணை முதல்வர் மனீஷ் சிசோடியா

தில்லி: Aam Aadmi Party Breaks : ஆம் ஆத்மியை உடைத்தால் முதல்வர் பதவி தருவதாக பாஜக தரப்பில் பேரம் பேசியதாக‌ தில்லி துணை முதல்வர் மனீஷ் சிசோடியா தெரிவித்தார்.

குஜராத்தில் தேர்தல் பிரசாரத்திற்காக வந்த அவர் செய்தியாளர்களிடம் கூறியது: பாஜகவிலிருந்து 2 சலுகைகளுடன் என்னை அண்மையில் தொடர்பு கொள்ளப்பட்டது (Recently I was contacted with 2 offers from BJP). அதில் ஒன்று, நான் ஆம் ஆத்மி கட்சியை உடைத்துக் கொண்டு பாஜகவில் இணைந்தால், எனக்கு எதிராக உள்ள சிபிஐ, அமலாக்கத்துறை வழக்குகள் அனைத்தும் திரும்பப் பெறப்படும். இரண்டாவதாக என்னை தில்லியின் முதல்வராக்கப்படும் என்பதாகும். தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் எனது அரசியல் குரு. அவரிடமிருந்து அரசியல் பாடம் கற்றேன். முதல்வராகவோ, பிரதமராகவோ வர வேண்டும் என்பதற்காக நான் அரசியலுக்கு வரவில்லை என்ற தெளிவான பதிலை அவர்களுக்கு தெரிவித்துவிட்டேன்.

முன்னதாக சுட்டுரையில் ஆம் ஆத்மி கட்சியிலிருந்து விலகி பாஜகவில் இணைந்தால் என் மீதான வழக்குகள் அனைத்தும் திரும்பப் பெறப்படும் என பாஜக செய்தி அனுப்பியது. நான் மஹா ராணா பிரதாபின் வழித் தோன்றல், ராஜபுத்திரன். நான் எனது தலையை துண்டித்துக் கொள்ளவும் தயார் (I am ready to cut off my head.). ஆனால் சதிகாரர்கள் முன்பாக ஒரு போதும் தலையை குனிய மாட்டேன். என் மீதான அனைத்து வழக்குகளும் பொய்யானவை. இதற்கு சட்ட ரீதியான பதிலை நான் தொடர்ந்து தெரிவித்துக் கொள்ள கடமை பட்டுள்ளேன். உண்மை ஒரு நாள் வெற்றி பெரும் என்றார்.

இந்த நிலையில் அவர் மீது தில்லி அரசு மேற்கொண்ட திருத்தத்தின் மூலம் மதுபானத் தயாரிப்பு நிறுவனங்கள் ஆதாயம் அடைந்தன என்றும், இதற்காக மனீஷ் சிசோடியாவின் நெருக்கமானவர்களுக்கு மதுபான நிறுவனங்கள் (Liquor companies) ரூ. 4 முதல் 5 கோடி வரை பணம் வழங்கியதாகவும் சிபிஐ குற்றம் சாட்டி இருந்தது. இந்தக் குற்றச்சாட்டிற்கு இன்டோ ஸ்பிரிட் நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் சமீர் மகேந்துருவிடம் சிபிஐ அதிகாரிகள் திங்கள்கிழமை சோதனை நடத்தினர். ஹைதராபாத்தைச் சேர்ந்த தொழிலதிபர் அருண் ராமசந்திர பிள்ளையிடம் ஏற்கெனவே விசாரணை நடத்திய சிபிஐ அதிகாரிகள், இரண்டாவது முறையாக சமீர் மகேந்துருவிடம் விசாரணை மேற்கொண்டனர்.

இந்த வழக்கில் மனிஷ் சிசோடியா, தில்லி அரசு அதிகாரிகள், தொழிலதிபர்கள், நிறுவனங்கள் என 15 பேரின் பெயர்கள் முதல் தகவல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளன. இந்த நிலையில் தில்லி கலால் கொள்கை முறைகேடு வழக்கில் சிக்கி உள்ள 2 உயர் அதிகாரிகள் திங்கள்கிழமை பணியிடை நீக்கம் (Suspend) செய்து மத்திய அரசு உத்தரவிட்டது. தில்லி அரசின் கலால் துறை முன்னாள் ஆணையரான மூத்த ஐஏஎஸ் அதிகாரி ஏ.கோபி கிருஷ்ணா, முன்னாள் துணை ஆணையரான டேனிக்ஸ் பிரிவு அதிகாரி ஆனந்த்குமார் ஆகியோரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இருவரின் பெயர்களும் முதல் தகவல் அறிக்கையில் இடம் பெற்றுள்ள நிலையில், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Also Read : கூட்டாட்சி உணர்வை வலுப்படுத்த பிரதமர் நரேந்திர மோடி எப்போதும் உழைத்து வருகிறார்: மத்திய அமைச்சர் அமித்ஷா

Also Read : திருவண்ணாமலை கிரிவலப்பாதையை 24 மணி நேரமும் கண்காணிக்க 5 ரோந்து வாகனங்கள்

Manish Sisodia Bargained to Give Chief Ministership if Aam Aadmi Party Breaks