Shikhar Dhawan : மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரருக்கு ஷிகர் தவண் கேப்டன்

Image Credit : Twetter.

தில்லி: India-west Indies Oneday, T20 Series : மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரருக்கு ஷிகர் தவண் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.


மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிராக ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் விளையாட உள்ள இந்திய அணி புதன்கிழமை அறிவிக்கப்பட்டது. இங்கிலாந்து சுற்றுப்பயணம் ஜூலை 17-ஆம் தேதி முடிய உள்ளது. அதனை தொடர்ந்து இந்திய அணி மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிராக விளையாட உள்ளது. மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிராக 3 ஒரு நாள், 5 டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக ஒரு நாள் போட்டிகள் ஜூலை 22-ஆம் தேதி தொடங்கி, ஜூலை 27-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

தொடரில் ஒரு நாள் மற்றும் டி20 போட்டிகளுக்கு ஷிகர் தவண் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளனர். ரவீந்திர ஜடேஜா துணைக் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். அணியில் ருதுராஜ் கெய்க்வாட், ஷுப்மன் கில், சஞ்சு சாம்சன், முகமது சிராஜ், ஹர்ஷ்தீப் சிங், தீபக் ஹூடா, சூர்யகுமார் யாதவ், ஷ்ரேஷ் ஐயர், இஷான் கிஷான், ஷர்துல் தாகூர், யுசுவேந்திர ச‌ஹால், அக்ஷர் பட்டேல், ஹவேஷ்கான், பிரசித்தி கிருஷ்ணா இடம்பெற்றுள்ளனர்.

விராட் கோஹ்லி கேப்டன் பதவியில் இருந்து விலகிய பின்னர் இந்திய அணியின் கேப்டனாக பலர் நியமிக்கப்பட்டு வருகின்றனர். நிகழாண்டு இந்திய அணியின் கேப்டனாக அறிவிக்கப்பட்டவர்களில் ஷிகர் தவண் 8-வதாக உள்ளார்.
2022-ஆம் ஆண்டில் விராட் கோஹ்லி, கே.எல். ராகுல், ரோஹித் சர்மா, ரிஷப் பந்த், ஹார்திக் பாண்டியா, ஜஸ்பிரீத் பும்ரா, தினேஷ் கார்த்திக், ஷிகர் தவண் ஆகியோர் கேப்டன்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்துள்ள நிலையில், மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான கிரிக்கெட் தொடர் மிகவும் முக்கியம் வாய்ந்ததாக கருத்தப்படுகிற‌து. ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளுக்கு பிறகு ஓய்வெடுத்திருந்த ஷிகர் தவண், தற்போது இந்திய அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். ஏற்கெனவே 2021-ஆம் ஆண்டில் இலங்கைக்கு எதிரான ஒரு நாள் மற்றும் டி20 தொடரில் கேப்டனாக பணியாற்றிய‌ அனுபவம் ஷிகர் தவணுக்கு உள்ளது. அந்த தொடரில் ஒரு நாள் மற்றும் டி20 போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.