MS Dhoni 41st birthday : எம்.எஸ். தோனியின் 41-வது பிறந்தநாள்: மனைவி சாக்ஷி, ரிஷப் பந்த் சிறப்பு பரிசு

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் 41-வது பிறந்த நாள் விழா (MS Dhoni 41st birthday) கொண்டாடப்பட்டது. பிறந்தநாள் கொண்டாட்டத்தில் எம்.எஸ். தோனிக்கு அவரது மனைவி சாக்ஷி மற்றும் இந்திய கிரிக்கெட் அணியின் வீரர் ரிஷப் பந்த் ஆகியோர் கலந்து கொண்டு அவருக்கு சிறப்பு பரிசு வழங்கினர். இது குறித்து தோனியின் மனைவி சாக்ஷி இன்ஸ்டாகிராமில் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார்.

சாம்பல் மற்றும் கருப்பு நிற ஜாக்கெட்டை அணிந்திருந்த இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தனது குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் பட்டர்ஸ்காட்ச் பழ கேக்கை வெட்டினார். தோனியுடன் உறவினர்கள், நண்பர்களும் கலந்து கொண்ட‌னர். இந்திய அணி வீரர்கள் இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் உள்ளனர். இருப்பினும் ரிஷப் பந்த், எம்.எஸ். தோனியின் பிறந்தநாளில் கலந்து கொண்டு அவருக்கு சிறப்பு பரிசு வழங்கினார்.

தோனிக்கு 41 வயதாகும் நிலையில், சுட்டுரையில் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக் தொடக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். தோனி அவுட்டாகாமல் இருக்கும் வரை, அவர் ஒரு போட்டியிலும் தோல்வியடைந்ததில்லை, ஒரு மேட்ச் ஃபினிஷரான, தோனிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். 2005-ஆம் ஆண்டு விசாகப்பட்டினத்தில் பாகிஸ்தானுக்கு எதிராக சதம் அடித்ததன் மூலம் சர்வதேச அளவில் சதம் அடித்த முதல் விக்கெட் கீப்பர் என்ற பெருமையை பெற்றார்.

தனது 41-வது பிறந்த நாளை வியாழக்கிழமை கொண்டாடும் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி, 2004 டிசம்பரில் அறிமுகமான விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன். இந்தியாவின் வெற்றிகரமான கேப்டனாக இருந்த அவர் மூன்று ஐசிசி கோப்பைகளையும் வென்ற ஒரே கேப்டனாவார். தோனியின் தலைமையில், இந்திய அணி டி20 உலகக் கோப்பை, 50 ஓவர் உலகக் கோப்பை மற்றும் சாம்பியன்ஸ் டிராபி ஆகியவற்றை வென்றது. ஐபிஎல் போட்டியில் அவர் விளையாடும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக‌ நான்கு முறை பட்டத்தை வென்றுள்ளார்.

2004-ஆம் ஆண்டு வங்காள தேசத்திற்கு எதிரான ஒருநாள் போட்டியில் எம்.எஸ். தோனி அறிமுகமானார். ஆனால் அவர் மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் வெறும் 19 ரன்களை எடுத்ததால் அவர் ரசிகர்களிடம் பிரபலமாகவில்லை. நீண்ட தலைமுடியுடன் சர்வதேச கிரிக்கெட்டில் நுழைந்த தோனி, பின்னாலில் பந்து வீச்சாளர்கள் அஞ்சும் வகையில் விளையாடினார். தோனி இலங்கைக்கு எதிராக விளையாடி, அதிகபட்சம் 183 ரன்கள் எடுத்துள்ளார். 350 ஒருநாள் போட்டிகளில் விளையாடி உள்ளார். அவர் அனைத்து பிரிவுகளிலும் ஐசிசி கோப்பைகளையும் வென்ற ஒரே கேப்டனாக இருக்கிறார், மேலும் அவரது வாழ்க்கையில் ‘கேப்டன் கூல்’ என்று அழைக்கப்படுகிறார். விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ஆகஸ்ட் 2020 இல் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.