Ponniyin Selvan 1 Poster : ஐஸ்வர்யா ராய் நடித்துள்ள ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் போஸ்டர் வெளியீடு

மணிரத்னம் இயக்கத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஐஸ்வர்யா ராய் பச்சன் (Aishwarya Rai Bachchan) நடிக்கும் திரைப்படம் ‘பொன்னியின் செல்வன்’. படத்தின் தயாரிப்பாளர்கள் புதன்கிழமை அப்படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்டனர். அதில் நடிகை ஐஸ்வர்யா ராய் பச்சன் கவர்ச்சியாகவும் அழகாகவும் தெரிகிறார். இந்த போஸ்டரில் அவர் ஏராளமான அலங்காரங்களுடன் பாரம்பரிய உடையில் காட்சியளிக்கிறார் (Ponniyin Selvan 1 Poster).

இப்படத்தில் ஐஸ்வர்யா ராய் பச்சன் போஜ்பூரி ராணி நந்தினியாக நடித்துள்ளார். அவர் கடைசியாக ஃபன்னி கான் (2018) படத்தில் அனில் கபூர் மற்றும் ராஜ்குமார் ராவ் ஆகியோருடன் நடித்தார். அவர் தனது இன்ஸ்டாகிராம் கணக்கில் போஸ்டரைப் பகிர்ந்து, அதற்கு “ராணி நந்தினியை சந்திக்கவும்! #PS1 என்று பதிவிட்டுள்ளார். தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் செப். 30- ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. என்று பதிவிட்டுள்ளார்.

ஆனால் ரசிகர்கள் மட்டுமின்றி ஐஸ்வர்யாவின் கணவர் அபிஷேக் பச்சனும் ஐஸ்வர்யாவை திரையில் பார்க்க ஆவலாக உள்ளார். அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சிவப்பு இதய எமோடிகானுடன் இருக்கும் போஸ்டரைப் பகிர்ந்துள்ளார். அபிஷேக் கடைசியாக நெட்ஃபிலிக்ஸ் ஹிட் ‘தாஸ்வி’ படத்தில் நடித்தார். விரைவில் வெளியாக உள்ள தமிழ்ப் திரைப்படம் ‘ஒத்த‌ செருப்பு சைஸ் 7’ படத்தின் இந்தி ரீமேக்கில் பணிபுரிகிறார்.

ஐஸ்வர்யா ராய் பச்சன் மற்றும் மணிரத்னம் இணையும் நான்காவது படம் பொன்னியின் செல்வன். இவர்கள் கடைசியாக இணைந்து பணியாற்றிய படம் ‘ராவண‌ன்’ (2010). 1997-ஆம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் ‘இருவர்’ திரைப்படத்தில் வெள்ளித்திரையில் ஐஸ்வர்யா ராய் அறிமுகமானார், அதைத் தொடர்ந்து 2007- ஆம் ஆண்டு தனது கணவருக்கு ஜோடியாக ‘குரு’ திரைப்படத்தில் நடித்தார்.

பொன்னியின் செல்வன் 1 படத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, த்ரிஷா, ஜெயராம், ஐஸ்வர்யா லட்சுமி, ஆர். சரத்குமார், சோபிதா துலிபாலா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைகா புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரிக்கும் இப்படம், கல்கி கிருஷ்ணமூர்த்தியின் 1955-ஆம் ஆண்டு வெளியான பொன்னியின் செல்வன் நாவலை அடிப்படையாகக் கொண்டது. இரண்டு பெரிய பாகங்களாக இந்த படம் உருவாக்கப்படுகிறது. முதல் பாகம் தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் செப். 30-ஆம் தேதி வெளியாகிறது.