Lucky man of India Deepak Hooda: இந்தியாவின் அதிர்ஷ்ட நட்சத்திரம்: அவர் விளையாடியபோது அணி தோற்றதே இல்லை

cricket : ஆகஸ்ட் 18 ஆம் தேதி ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் ஜிம்பாப்வேக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றால், தீபக் ஹூடா உலக சாதனையை சமன் செய்வார். 2 வது போட்டியில் வெற்றி பெற்றால் புதிய உலக சாதனை படைப்பார்.

பெங்களூரு: (Deepak Hooda) இந்திய அணிக்கு அதிர்ஷ்ட நட்சத்திரமாக அவர் உள்ளார். அவர் இந்திய அணிக்காக‌ எப்போது விளையாடினாலும் ஒரு போட்டியில் கூட தோற்றதில்லை. அவர் இதுவரை இந்திய அணியின் 11 வீரர்களில் ஒருவராக‌ தேர்வு செய்யப்பட்டு, 14 போட்டிகளில் விளையாடி உள்ளார். இதில் 14 போட்டிகளிலும் இந்தியா வெற்றி பெற்றுள்ளது. அவர் வேறு யாருமல்ல, இந்திய கிரிக்கெட் அணியின் புதிய நம்பிக்கை, பரோடாவைச் சேர்ந்த‌ ஆல்ரவுண்டர் தீபக் ஹூடாதான்.

27 வயதான ஆல்-ரவுண்டர் தீபக் ஹூடா பிப்ரவரி 6 ஆம் தேதி அகமதாபாத்தில் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானார். அதன்பிறகு, தீபக் ஹூடா 5 ஒருநாள் மற்றும் 9 டி20 போட்டிகள் (9 T20 matches) என மொத்தம் 14 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ளார். இந்த 14 போட்டிகளிலும் இந்தியா தோல்வி அடையவில்லை என்பதுதான் சிறப்பு. தீபக் ஹூடா அறிமுக ஆட்டத்தில் தொடர்ந்து வெற்றி பெற்று உலக சாதனையை சமன் செய்ய இன்னும் ஒரு வெற்றி மட்டுமே உள்ளது. ருமேனியாவுக்காக விளையாடி வரும் இந்தியாவில் பிறந்த வீரர் சாத்விக் நதிகோட்லா, அறிமுகமானதில் இருந்து ருமேனியா தொடர்ந்து 15 போட்டிகளில் வெற்றி பெற்று உலக சாதனை படைத்துள்ளார். ஆகஸ்ட் 18 ஆம் தேதி ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் ஜிம்பாப்வேக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றால், தீபக் ஹூடா உலக சாதனையை சமன் செய்வார். 2 வது போட்டியில் வெற்றி பெற்றால் புதிய உலக சாதனை படைக்க உள்ளார்.

சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான பிறகு தொடர் வெற்றி

சாத்விக் நாடிகோட்லா (ருமேனியா) : 15

தீபக் ஹூடா (இந்தியா) : 14*

டேவிட் மில்லர் (தென்னாப்பிரிக்கா) : 13

சாந்தனு வசிஸ்தா (ருமேனியா) : 13

காலிஸ் கிங் (வெஸ்ட் இண்டீஸ்) : 12

தீபக் ஹூடாவின் அறிமுகத்திற்குப் பிறகு இந்தியாவின் வெற்றிகள்:

முதல் போட்டி (ODI): மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

2 வது போட்டி (ODI): வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 44 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

3 வது போட்டி (டி20): இலங்கைக்கு எதிராக 62 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

4 வது போட்டி (டி20): இலங்கைக்கு எதிரான 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

5 வது போட்டி (டி20): இலங்கைக்கு எதிரான 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

6 வது போட்டி (டி20): அயர்லாந்துக்கு எதிராக 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

7 வது போட்டி (டி20): அயர்லாந்துக்கு எதிராக 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

8 வது போட்டி (டி20): இங்கிலாந்துக்கு எதிராக 50 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

9 வது போட்டி (ODI): மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக 3 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

10 வது போட்டி (ODI): மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

11வது போட்டி (ODI): மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக 119 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

12 வது போட்டி (டி20): மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

13 வது போட்டி (டி20): மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக 59 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

14வது போட்டி (டி20): வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் 88 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி