Mangalore airport : மங்களூரு விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: இளம்பெண் உட்பட இருவர் கைது

Bomb message : மங்களூரு விமான நிலையத்தில் சந்தேகத்திற்கிடமான முறையில் நடந்து கொண்ட இளைஞர் மற்றும் இளம்பெண்ணை பாஜ்பே போலீசார் கைது செய்து விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

மங்களூரு: Mangalore airport: மத்திய அரசின் உத்தரவின் பேரில் கடந்த சில நாட்களாக விமான நிலையங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. பயணிகள் அனைவரும் தீவிர சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படுகிறனர். இந்த நிலையில் மங்களூரு விமான நிலையத்தில் சந்தேகத்திற்கிடமான முறையில் நடந்து கொண்ட இளைஞர் மற்றும் இளம் பெண்ணை பாஜ்பே போலீசார் கைது செய்து தீவிர விசாரணை செய்து வருகின்ற‌னர்.

இண்டிகோ விமான ஊழியர்கள் அளித்த புகாரின் அடிப்படையில், பாஜ்பே காவல் நிலையம் அந்த இளைஞனையும் இளம் பெண்ணையும் கைது செய்தது. ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணிக்கு மங்களூரில் இருந்து மும்பைக்கு விமானம் புறப்பட்டது. விமானத்தில் அமர்ந்திருந்த இளைஞருக்கு யுஆர்ஏ பாம்பர் (You are a bomber) என இளம்பெண் மெசேஜ் செய்ததாக கூறப்படுகிறது.

இந்த குறுஞ்செய்தியை அந்த இளைஞனின் அருகில் அமர்ந்து மும்பைக்கு பயணித்த பெண் ஒருவர் (woman who traveled to Mumbai) கவனித்துள்ளார். உடனடியாக, இது தொடர்பாக இண்டிகோ விமான ஊழியர்களுக்கு அந்த பெண் தகவல் தெரிவித்தார். வெடிகுண்டு தாக்குதல் பற்றிய தகவல் அறிந்ததும், புறப்படுவதற்கு தயாராக இருந்த விமானம் நிறுத்தப்பட்டு, பயணிகளை, பாதுகாப்புப் படையினர் விமானத்தில் இருந்து இறக்கினர்.

இளைஞர் ஒருவருக்கும், இளம்பெண்ணுக்கும் இடையே நடந்த இந்த அரட்டை விமான நிலையத்தில் (airport) பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. பாதுகாப்பு சோதனைக்கு பிறகு மாலை 5 மணியளவில் விமானம் மங்களூரில் இருந்து மும்பைக்கு புறப்பட்டது. உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர் தீபயன் மஞ்சி மற்றும் இளம் பெண் சிம்ரன் டாம் ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர்.

பெங்களூரு நோக்கி புறப்பட்ட இளம்பெண், விமான நிலையத்தில் வைத்து வெடிகுண்டு என அந்த இளைஞனுக்கு இந்த செய்தியை அனுப்பியதாக கூறப்படுகிறது. ஆனால் இது போன்ற செய்திகள் பாதுகாப்புக் கவலையை ஏற்படுத்தியதன் பின்னணியில் அந்த இளைஞர் மற்றும் பெண்ணிடம் போலீசார் (Police) விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். கைது செய்யப்பட்ட இளம் பெண் சுற்றுலாவிற்காக மங்களூருக்கு வந்துள்ளதாக கூறப்படுகின்றது. விசாரணையில் இருவரும் நண்பர்கள் என்பது தெரியவந்தது. போலீஸ் விசாரணையில், இந்த இருவரும் நகைச்சுவையாக இப்படி செய்திகளை பரிமாறிக்கொண்டதாக தெரிவித்தனர். இளைஞர் மற்றும் இளம்பெண் மீது இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 505 1பி மற்றும் சி ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.