Jasprit Bumrah To Miss Srilanka Odi Series: இலங்கை தொடரிலிருந்து பும்ரா நீக்கம் ஏன்?

காயத்திலிருந்து இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து (Jasprit Bumrah To Miss Srilanka Odi Series) வீச்சாளர் பும்ரா குணம் அடைந்திருந்தாலும் அவரை இலங்கைக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் பிசிசிஐ சேர்க்கவில்லை. இதனால் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில், இதற்கான காரணம் பற்றிய தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்திய அணியில் மிக முக்கிய வேகப்பந்து வீச்சாளராக பும்ரா இருந்து வருகிறார். இந்திய அணியில் பேட்டிங் வரிசைக்கு நம்பிக்கை அளிக்கக் கூடிய வீரர்கள் பலர் இருக்கின்றனர். அந்த அளவுக்கு பவுலிங்கில் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் வீரர்கள் குறைவாகவே உள்ளனர்.

இதற்கிடையே கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரின் பும்ராவுக்கு முதுகில் காயம் ஏற்பட்டது. இதனால் அவர் தொடரிலிருந்து விலகி சிகிச்சை பெற்று வந்தார். இந்த காயத்திற்கு அறுவை சிகிச்சை தேவையில்லை. இருந்தாலும் அவர் நீண்ட காலம் ஓய்வில் இருக்க வேண்டும் எனவும் டாக்டர்கள் அறிவுறுத்தினர். இதனால் காயம் குணமடைய பும்ரா ஓய்வில் இருந்தார்.

மேலும் இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடுவார் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் திடீரென்று அவரை நீக்கி பிசிசிஐ அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஆஸ்திரேலியா அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் போட்டியில் விளையாட உள்ளது. அதே போன்று உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்தியா விளையாட அதிகமான வாய்ப்புகள் உள்ளது. இதனை கவனத்தில் கொண்டு பும்ராவுக்கு கூடுதல் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.