IPL 2023 RCB TEAM : ஆர்சிபி அணியில் 3 வீரர்கள் விடுவிப்பு?

ஐபிஎல் 2023 ஏலத்திற்கு முன்னதாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் இருந்து கரண் ஷர்மா, அனுஜ் ராவத், சித்தார்த் கவுல் ஆகியோரை விடுவிக்க அந்த அணியின் தயாராக உள்ளது.

IPL 2023 RCB TEAM : இந்தியன் பிரீமியர் லீக்கிற்கான (ஐபிஎல் 2023) அனைத்து ஏற்பாடுகளும் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. RCB டீம் ரசிகர்கள் கூட இந்த முறை கோப்பையை சொந்தமாக்க முயற்சி மேற்கொண்டுள்ளனர். இதற்கிடையில், RCB அணி பல மாற்றங்களை செய்ய தயாராக உள்ளது. மேலும், டீம் இந்தியாவின் மூன்று பிரபல வீரர்கள் இந்த முறை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் இணைவது உறுதி.

ஐபிஎல் வரலாற்றில் இதுவரை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி (Royal Challengers Bangalore team)கோப்பையை வென்றதில்லை. ஆனால் அந்த அணிக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். கேப்டன் பதவியை விராட் கோலி கைவிட்டாலும், ஃபாஃப் டு பிளெசிஸ் அணியை வழி நடத்தினாலும், ஆர்சிபியின் அதிர்ஷ்டம் மட்டும் கைக் கொடுக்க‌வில்லை. ஆனால், கடந்த முறை மூன்றாவது இடத்துடன் திருப்தி அடைந்த ஆர்.சி.பி., இம்முறை கோப்பையை வெல்லும் கனவில் உள்ளது. இதன்காரணமாக சில வீரர்கள் அணியில் இருந்து நீக்கப்பட்டு இளம் வீரர்கள் அணியில் சேர்க்கப்பட உள்ளனர். ஏற்கனவே விராட் கோலி, ஃபாஃப் டு பிளெசிஸ், தினேஷ் கார்த்திக், கிளென் மேக்ஸ்வெல் ஆகியோர் அணியின் அடிப்படையாக இடம் கிடைப்பது உறுதி. தினேஷ் கார்த்திக்கும் இந்திய அணியில் இடம் பிடித்துள்ளார். எனவே இந்த நான்கு வீரர்களும் இந்த ஐபிஎல் போட்டியில் களமிறங்குவது உறுதி.

ஐபிஎல் 2023 ஏலத்திற்கு முன்னதாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் இருந்து கரண் ஷர்மா, அனுஜ் ராவத், சித்தார்த் கவுல் ஆகியோரை விடுவிக்க தயாராக உள்ளது.

கரண் சர்மா (Karan Sharma)

ஐபிஎல் 2023 ஏலத்திற்கு முன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு வெளியிடக்கூடிய வீரர்களில் கரண் ஷர்மாவும் ஒருவர். வனிந்து ஹசரங்காவின் பேக்-அப் லெக் ஸ்பின்னராக கரண் ஷர்மாவை அந்த அணி தேர்வு செய்தது. ஆனால் இவர் கடந்த முறை தனது திறமையை வெளிப்படுத்தவில்லை. மேலும், 2023ல் மீண்டும் ஐபிஎல் விளையாடினால், அதிக பணம் முதலீடு செய்ய வேண்டியிருக்கும். மறுபுறம் வனிந்து ஹசரங்கவும் எதிர்பார்த்தபடி விளையாடவில்லை. இதனால் சிறந்த வீரரை தேர்வு செய்ய ஆர்சிபி திட்டமிட்டுள்ளது. இதன்காரணமாக கரண் சர்மா அணியில் இருந்து நீக்கப்பட வாய்ப்புள்ளது.

அனுஜ் ராவத் (Anuj Rawat)

ஐபிஎல் 2022 மெகா ஏலத்தில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் அனுஜ் ராவத்தை 3.4 கோடி ரூபாய்க்கு RCB வாங்கியது. நல்ல தொடக்கம் இருந்தபோதிலும், கடந்த ஐபிஎல்லில் 8 போட்டிகளில் 16.13 என்ற சராசரியில் 129 ரன்கள் எடுத்தார். எனவே, அடுத்த ஐபிஎல் போட்டியில் அனுஜ் ராவத் இதை விட சிறப்பாக செயல்பட வாய்ப்பு குறைவு என்பதால் அவரை அணியில் இருந்து நீக்க அணியின் நிர்வாக குழு முடிவு செய்துள்ளது.

சித்தார்த் கவுல் (Siddharth Kaul)

சித்தார்த் கவுல் 2018 இந்திய அணியில் முக்கிய வீரராக இருந்தார். 2018ல் இங்கிலாந்துக்கு எதிராக தனது முதல் ஒருநாள் போட்டியில் விளையாடினார். கடந்த முறை RCB வேகப்பந்து வீச்சாளர் சித்தார்த் கவுலை அணியில் சேர்த்திருந்தது. ஆனால் அவர் ஒரு போட்டியில் மட்டுமே விளையாடினார். RCB எதிர்வரும் ஐபிஎல் மினி ஏலத்தில் சித்தார்த் கவுலை நீக்கிவிட்டு அவருக்கு பதிலாக அணியில் வேறு ஒருவர் இடம் பிடிக்க வாய்ப்புள்ளது.