M.K.Stalin has back pain: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு முதுகு வலி: மருத்துவர்கள் அறிவுறுத்தல்

சென்னை: Tamil Nadu Chief Minister M.K.Stalin has back pain: doctors advise. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு முதுகு வலி ஏற்பட்டுள்ளதால் நெடும் பயணத்தை தவிர்க்க மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு முதுகு வலி ஏற்பட்டுள்ளதால் நீண்ட பயணங்களை தவிர்க்கும்படி மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

எனவே, வரும் 30-10-2022 அன்று இராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் நடைபெறவுள்ள தேவர் திருமகனாரின் 115-ஆவது பிறந்தநாள் மற்றும் குரு பூஜையில், முதலமைச்சர் அவர்களின் சார்பில், மூத்த அமைச்சர்களான நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, கூட்டுறவுத்துறை அமைச்சர் இ.பெரியசாமி உள்ளிட்ட அமைச்சர் பெருமக்கள் இவ்விழாவில் நேரில் கலந்துகொண்டு, மரியாதை செலுத்துவார்கள்.

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.