Rohit Best T20 Captain : டி20 கிரிக்கெட் போட்டிகளின் வெற்றியின் அடிப்படையில் உலகின் நம்பர் 1 கேப்டன் ரோஹித் சர்மா

சர்வதேச டி20 கிரிக்கெட்டில், ரோஹித் சர்மா இந்திய அணியை 30 போட்டிகளில் வழிநடத்தி 26 வெற்றி மற்றும் 4 தோல்விகளை கண்டுள்ளார். வெற்றி சதவீதம் 86.7%. சர்வதேச டி20 போட்டிகளில் கேப்டனின் அதிகபட்ச வெற்றி சதவீதம் இதுவாகும்.

லண்டன்: (India Cricket Team Captain Rohit Sharma : இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா டி20 சர்வதேச கிரிக்கெட்டில் இப்போது உலகின் நம்பர்-1 கேப்டனாக உள்ளார். இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரின் முதல் 2 போட்டிகளில் வெற்றி பெற்றதன் மூலம், டி20 கிரிக்கெட்டின் வெற்றிகரமான கேப்டன் (Rohit Best T20 Captain) என்ற பெருமையை ரோஹித் சர்மா பெற்றுள்ளார்.

சர்வதேச டி20 கிரிக்கெட்டில், ரோஹித் சர்மா இந்திய அணியை 30 போட்டிகளில் வழிநடத்தி 26 வெற்றி மற்றும் 4 தோல்விகளை கண்டுள்ளார். வெற்றி சதவீதம் 86.7%. சர்வதேச டி20 போட்டிகளில் கேப்டனின் அதிகபட்ச வெற்றி சதவிகித‌ம் இதுவாகும். கோவிட் காரணமாக இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியைத் தவறவிட்ட ரோஹித் சர்மா, டி20 தொடருக்கான அணிக்குத் திரும்பிய அணிக்கு கேப்டனாக இருந்தார். சௌதாம்டன் மைதானத்தில் இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் ரோஹித் தலைமையிலான இந்திய அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன், எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் சனிக்கிழமை நடைபெற்ற 2-வது போட்டியில் 49 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரை (India Vs England T20 Series) இன்னும் ஒரு போட்டி மீதமுள்ள நிலையில் கைப்பற்றியது.

Image credit: Twitter.

இங்கிலாந்துக்கு எதிராக தொடர்ந்து 2 டி போட்டிகளில் 2-இல் வெற்றியை பெற்றதன் மூலம், சதவிகித அடிப்படையில் அதிக வெற்றி பெற்ற கேப்டன் என்ற பெருமையை ரோஹித் சர்மா பெற்றுள்ளார்.

சர்வதேச டி20 கேப்டனாக சிறந்த வெற்றி % (குறைந்தபட்ச 20 போட்டிகள்).

கேப்டன் போட்டி வெற்றி தோல்வி வெற்றி%

ரோஹித் சர்மா (இந்தியா) 30 26 04 86.7
அஸ்கர் ஆப்கான் (ஆப்கானிஸ்தான்) 52 42 10 80.8
சர்பராஸ் அகமது (பாகிஸ்தான்) 37 29 08 78.4
கிரேம் ஸ்மித் (தென் ஆப்பிரிக்கா) 27 18 09 66.7
சோயிப் மாலிக் (பாகிஸ்தான்) 20 13 07 65.0

சர்வதேச டி20 கேப்டன்சியில் ரோஹித் சர்மா 86.7% வெற்றி சதவீதத்துடன் நம்பர் 1 ஆகவும், ஆப்கானிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் அஸ்பர் ஆப்கான் 80.8% பெற்று 2-வது இடத்திலும் உள்ளனர். பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் சர்பராஸ் அகமது (78.4%) 3-வது இடத்திலும், தென்னாப்பிரிக்கா அணியின் முன்னாள் கேப்டன் கிரேம் ஸ்மித் (66.7%), பாகிஸ்தான் அணியின் மற்றொரு முன்னாள் கேப்டன் சோயப் மாலிக் (65%) முறையே 4 மற்றும் 5-வது இடத்திலும் உள்ளனர்.

விராட் கோஹிலியின் வாரிசாக இந்திய அணியின் கேப்டனாக பொறுப்பேற்றுள்ள ரோஹித் சர்மா, முதன்முறையாக முழு அளவிலான கேப்டனாக இந்திய அணியை வெளிநாட்டு மண்ணில் வழிநடத்தி வருகிறார். இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரை வென்ற ரோஹித் சர்மாவுக்கு முதல் தொடர் மறக்க முடியாதது. அதன் மூலம் கிரிக்கெட் ரசிகர்களிடம் 5-வது டெஸ்ட் போட்டியில் அடைந்த தோல்விக்கு இந்திய அணி பழி தீர்த்துக் கொண்டுள்ளது.