Ponniyin Selvan : பொன்னியின் செல்வன் திரைப்படத்தை எம்.ஜி.ஆரால் ஏன் எடுக்க முடியாமல் போனது ?

சென்னை : Ponniyin Selvan Film : கல்கியின் “பொன்னியின் செல்வன்” கதையில் பலரும் நடிக்க விரும்பி இருந்த நிலையில் கடந்த 1958-ம் ஆண்டு, ரூ. 10 ஆயிரம்கொடுத்து பொன்னியின் செல்வன் கதையின் உரிமையை நடிகர் எம்ஜிஆர் பெற்றார். அவர் காலத்தில் பணம் கொடுத்துதான் கதை உரிமை பெறப்பட்டது. நடோடி மன்னன் திரைப்படத்திற்கு பின்பு, பொன்னியின்செல்வத்தை படமாக்க நினைத்தார்.

அதன்பின், பொன்னியின் செல்வன் நாட்டுடைமையாக்கப்பட்டது. இந்த‌ காரணத்தால் யார் வேண்டுமானாலும் அந்தக் கதையை திரைப்படமாக எடுக்கலாம். சட்டப்படி அதில் தவறில்லை. என்றாலும் தர்மப்படி கல்கியின் குடும்பத்திற்கு ஏதாவது கொடுக்கலாம். விரும்பாவிட்டால் கொடுக்காமலும் இருக்கலாம்.

பொன்னியின் செல்வனை’ படமாக்க முயன்ற எம்.ஜி.ஆர், இந்தப் படத்தில் இரண்டு கேரக்டரில் நடிக்க இருந்தார். ஒன்று வந்தியத்தேவன். மற்றொன்று அருள்மொழிவர்மன். இந்தப் படத்துக்கு முன் வைஜயந்திமாலா எம்.ஜி.ஆருடன் ஒரே ஒரு படத்தில்தான் நடித்திருந்தார். அவரை பொன்னியின் செல்வனில் குந்தவை கேரக்டரில் நடிக்க ஒப்பந்தம் செய்திருந்தார் எம்.ஜி.ஆர். ஜெமினிகணேசன், பத்மினி, சாவித்ரி, நம்பியார், டி.எஸ்.பாலையா உட்பட பலர் நடிக்க இருந்தனர்.

முதலில் எம்.ஜி.ஆர் தனது எம்ஜியார் பிக்சர்ஸ் சார்பில் தயாரித்து, இயக்குவதாக இருந்தது. பிறகு தயாரிப்பு மற்றும் நடிப்பை மட்டும் பார்த்துக் கொண்டு வேறொருவர் இயக்குவற்கு முடிவு செய்யப்பட்டது. அப்போதுதான் ஒரு நாடகத்தில் நடிப்பதற்காக, எம்.ஜி.ஆர் சீர்காழி சென்றுகொண்டிருந்தபோது விபத்தில் சிக்கினார். விபத்தில் சிக்கியதால் 6 மாதம் ஓய்வு தேவைப்பட்டது. ஓய்வு முடிந்து குணமடைந்ததும், அவர் நடித்து பாதியில் நின்றிருந்த பல படங்களை நடித்துக் கொடுத்தார். இதனால் பொன்னியின் செல்வனை அவர் எடுக்க முடியாமல் போனது.

தற்போது மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியில் செல்வன் திரைப்படம் உருவாகி உள்ளது. இதில் நடிகர்கள் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம் பிரபு, நடிகைகள் த்ரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்டோர் நடத்துள்ளனர். இந்த திரைப்படம் செப்டம்பர் மாதத்தில் வெளியாக உள்ளது.