umpire Rudi Koertzen dies in car accident : ஐசிசி கிரிக்கெட் நடுவர் ரூடி கொர்ட்ஷன் கார் விபத்தில் உயிரிழப்பு

73 வயதான ரூடி கொர்ட்ஷன் கேப் டவுனில் ஒரு வாரமாக நடந்த‌ இறுதி கோல்ஃப் போட்டிக்குப் பிறகு நெல்சன் மண்டேலா விரிகுடாவில் உள்ள தனது சொந்த நகரமான டெஸ்பாட்ச்க்கு திரும்பிக் கொண்டிருந்தபோது விபத்து ஏற்பட்டது. ரூடி கொர்ட்ஷன் ஜூனியர் தனது தந்தையின் மரணச் செய்தியை உறுதிப்படுத்தினார்.

கேப்டவுன்: ICC cricket umpire Rudi Koertzen dies in car accident : ஐசிசி எலைட் குழுவின் நடுவராக இருந்த, கிரிக்கெட் உலகின் மிகவும் பிரபலமான முகமான தென்னாப்பிரிக்காவின் ரூடி கொர்ட்ஷன் கார் விபத்தில் உயிரிழந்தார். தென்னாப்பிரிக்காவின் ரிவர்ஸ்டேல் என்ற இடத்தில் செவ்வாய்க் கிழமை அதிகாலை நடந்த கார் விபத்தில் ரூடி குர்ட்ஜானுடன் காரில் பயணித்த மேலும் மூன்று பேர் உயிரிழந்தனர். குர்த்ஜானின் மறைவுக்கு வீரேந்திர சேவாக், விவிஎஸ் லட்சுமண், யுவராஜ் சிங் உள்ளிட்ட கிரிக்கெட் உலகம் இரங்கல் தெரிவித்துள்ளது.

73 வயதான ரூடி கொர்ட்ஷன் கேப் டவுனில் ஒரு வாரமாக நடந்த‌ இறுதி கோல்ஃப் போட்டிக்குப் பிறகு நெல்சன் மண்டேலா விரிகுடாவில் உள்ள தனது சொந்த நகரமான டெஸ்பாட்ச்க்கு திரும்பிக் கொண்டிருந்தபோது விபத்து ஏற்பட்டது. ரூடி கொர்ட்ஷன் (Rudi Koertzen) ஜூனியர் தனது தந்தையின் மரணச் செய்தியை உறுதிப்படுத்தினார்.

ரூடி கொர்ட்ஷன் சிறு வயதிலிருந்தே கிரிக்கெட்டில் ஆர்வம் கொண்டிருந்தார் மற்றும் தென்னாப்பிரிக்க ரயில்வே துறையில் பணிபுரியும் போது லீக் கிரிக்கெட்டில் விளையாடினார். 1981 ஆம் ஆண்டு நடுவர் பணி செய்யும் தொழிலில் நுழைந்த ரூடி கொர்ட்ஷன், 1992 ஆம் ஆண்டு போர்ட் எலிசபெத்தில்(Port Elizabeth) நடைபெற்ற இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா இடையேயான ஒரு நாள் போட்டியின் போது சர்வதேச நடுவராக பணிபுரிந்தார்.

1992 முதல் 2010 வரை, ரூடி குர்ட்சன் மொத்தம் 108 டெஸ்ட் போட்டிகள், 209 ஒரு நாள் சர்வதேச போட்டிகள் மற்றும் 14 டி20 சர்வதேச போட்டிகளுக்கு நடுவராக இருந்தார்.

மேற்கிந்தியத் தீவுகளின் ஸ்டீவ் பக்னருக்குப் (Steve Buckner) பிறகு, அவர் 100 டெஸ்ட் போட்டிகளில் நடுவராக சாதனை படைத்தார். 2007 ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு ஆஸ்திரேலியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே ரூடி கொர்ட்ஷன் நடுவராகவும் இருந்தார். 2003 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற ஐசிசி உலகக் கோப்பையில், இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையேயான போட்டியில் ரூடி கொர்ட்ஷன் நடுவராகவும் செயல்பட்டார்.

சுட்டுரையில் கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக் (Virender Sehwag) தெரிவித்துள்ள இரங்கல் செய்தி,
வேல் ரூடி கொர்ட்ஷன் ! ஓம் சாந்தி. அவரது குடும்பத்தினருக்கு அனுதாபங்கள்.

அவருடன் ஒரு பெரிய உறவு இருந்தது. நான் சொதப்பலான ஷாட் அடிக்கும் போதெல்லாம், “புத்திசாலித்தனமாக விளையாடு, உன் பேட்டிங்கை நான் பார்க்க விரும்புகிறேன்” என்று என்னைத் திட்டுவார்.

அவர் தனது மகனுக்கு ஒரு குறிப்பிட்ட பிராண்ட் கிரிக்கெட் பேட்களை வாங்க விரும்பினார் என்று தெரிவித்துள்ளார்.

சுட்டுரையில் கிரிக்கெட் வீரர் விவிஎஸ் லக்ஷ்மண் (VVS Laxman) தெரிவித்துள்ள இரங்கல் செய்தி,

முன்னாள் நடுவர் ரூடி கொர்ட்ஷன் காலமானதைக் கேட்டு மிகவும் வருத்தமாக இருக்கிறது. அவர் நாம் பார்த்த மிக கூர்மையான மற்றும் சிறந்த நடுவர்களில் ஒருவர். அவரது குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள். RIP ரூடி என்று தெரிவித்துள்ளார்.

சுட்டுரையில் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் (Yuvraj Singh) தெரிவித்துள்ள இரங்கல் செய்தி

ரூடி கொர்ட்ஷன் திடீரென காலமானார் என்ற சோகமான செய்தி. அவர் ஒரு திறமையான தனிநபர் மற்றும் விளையாட்டு கண்ட சிறந்த நடுவர்களில் ஒருவர், அவரது கூர்மையான முடிவெடுக்கும் திறன்களுக்கு பெயர் பெற்றவர்.

அவரது குடும்பத்தினருக்கும் நலம் விரும்பிகளுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள் என்று தெரிவித்துள்ளார்.