oxygen infrastructure should be compulsory : ஆக்சிஜ‌ன் கட்டமைப்பு இல்லாத மருத்துவமனைகளுக்கு பதிவு உரிமம் வழங்கப்பட மாட்டாது

மருத்துவமனைகளில் உள்ள படுக்கை, வசதிக்கேற்ப ஆக்சிஜன் கட்டமைப்பு உருவாக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. தேவைப்படும் பட்சத்தில் வென்டிலேட்டர் வசதிகள் ஏற்படுத்த வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

சென்னை: Hospitals without oxygen infrastructure will not be granted registration license : ஆக்சிஜ‌ன் கட்டமைப்பு இல்லாத மருத்துவமனைகளுக்கு பதிவு உரிமம் வழங்கப்பட மாட்டாது என்று மருத்துவ சேவைகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.


கரோனா தொற்றிற்கு பிறகு மருத்துவமனைகள், கிளினிக்குகளை பதிவு செய்ய ஆக்சிஜன் வெண்டிலெட்டர் வசதிகள் இருப்பது கட்டாயம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தீ விபத்து ஏற்படும் போது பயன்படுத்துவதற்கான சாய்தளம் அல்லது பிரத்யேக மின் தூக்கிகள் வசதிகள் அவசியம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இத்தகைய வசதிகள் இல்லாத மருத்துவமனைகள், கிளினிக்குகளுக்கு உரிமம் பதிவு செய்யப்பட மாட்டாது என்று மருத்துவ சேவைகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் 75 ஆயிரத்திற்கும் அதிகமான‌ மருத்துவமனைகள், கிளினிக்குகள், சிறிய மருத்துவ மையங்கள் உள்ளன. இவற்றிற்கு பதிவு உரிமம் பெறுவது அவசியம். அந்த உரிமத்தை 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை புதுப்பிக்க வேண்டும். இதுவரை தமிழகம் முழுவதும் 40 ஆயிரம் விண்ணப்பங்கள் பெற்றப்பட்டுள்ளது. அவற்றிதின் தகுதியான 30 ஆயிரம் மருத்துவமனை, கிளினிக்குகளுக்கு பதிவு வழங்கப்பட்டு உள்ளது (30 thousand hospitals and clinics have been registered). சென்னையில் 7 ஆயிரம் விண்ணப்பங்கள் வந்தன. இதில் 5 ஆயிரத்திற்கும் அதிகமான உரிமங்கள் அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கரோனா தட்டுப்பாட்டின் போது மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனால் அடிப்படை வசதிகள் குறைபாடு உள்ளதாக புகார்கள் வந்தன. இதனையடுத்து பதிவு உரிமம் மற்றும் மருத்துவமனைகளைப் புதுப்பிப்பதற்கான விதிகள் சிலவற்றை மருத்துவ சேவைகள் இயக்ககம் கட்டாயமாக்கி உள்ளது.

இது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியது: . அவசர காலங்களில் பயன்படுத்துவதற்கான சாய்தள் வசதிகள் அமைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஒருவேளை அதற்கான இடவசதி இல்லை எனில் தனி மின் இணைப்புடன் கூடிய மின் தூக்கி வசதிகள் செய்திருக்க வேண்டும். இந்த வசதிகள் உள்ள மருத்துவமனைகளுக்கு மட்டுமே பதிவு உரிமம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு உரிமம் பெறாமல் நடத்தப்படும் மருத்துவமனைகள் மீது நடவடிக்கை (Action against unlicensed hospitals) எடுப்பது குறித்து ஆலோசித்து வருகிறோம். அத்தகைய மருத்துவமனைகளுக்கு முதல் கட்டமாக நோட்டீஸ் அனுப்பப்படும். அதனை பொருட்படுத்தாமல் செயல்படும் மருத்துவமனைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

எனவே பதிவு உரிமம் கோரி விண்ணப்பிக்காத மருத்துவமனைகளுக்கு நோட்டீஸ் வழங்கப்படும்’ என மருத்துவ சேவைகள் இயக்குனரக அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழகத்தில் பல மருத்துவமனைகள் பதிவு உரிமம் பெறாமல் நடத்துவதால், அங்கு அனுமதிக்கப்படும் நோயாளிகள் சில நேரங்களில் இறப்பதாக பொது மக்கள் புகார் தெரிவித்த‌னர். இதனையடுத்து மருத்துவ சேவைகள் இயக்ககம் இந்த அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. மேலும் தமிழ்நாட்டில் செயல்படும் 51 மருத்துவமனைகள் மற்றும் சுகாதார மையங்கள் மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் (Pollution Control Board) அனுமதி சான்று இல்லாமல் செயல்படுவது தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது இந்த விவரங்கள் மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்தது. மேலும் 715 மருத்துவமனைகள் மருத்துவக் கழிவுகளை அகற்றுவதற்கான முறையான அங்கீகாரம் பெறவில்லை.