Kanchipuram Murder: சாலையில் ஓட ஓட ஒருவர் வெட்டிக்கொலை: காஞ்சிபுரத்தில் அதிர்ச்சி சம்பவம்

File Picture

காஞ்சிபுரம்: A man was killed while running on the road: காஞ்சிபுரம் தேசிய நெடுஞ்சாலையில் ரியல் எஸ்டேட் உரிமையாளரை ஓட ஓட வெட்டிக்கொலை செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கஞ்சா போதையில் ரியல் எஸ்டேட் உரிமையாளரை வம்புக்கிழுத்து, மது பாட்டில்கள் மற்றும் அரிவாளால், ஓட ஓட விரட்டி படுகொலை செய்த 3 பேர் காவல்நிலையத்தில் சரணடைந்தனர். கூலிப் படையிடம் மற்றும் போதை கும்பல்களால் காஞ்சிபுரம் மாவட்டம் கொலை நகராமாக மாறி வருவது பொது மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம், ராஜகுளம் என்ற பகுதியில் சென்னை – பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 30 ஆண்டுகளாக மளிகை கடை வைத்து நடத்தி வருபவர் சிவஞானம். இவருக்கு 3 மகள்கள் உள்ளனர்.

இப்பகுதியில் பல ஆண்டுகளாக வசித்து வருவதால் அனைவருக்கும் நன்கு அறிமுகமானவர். இவர் மளிகை கடையோடு, ரியல் எஸ்டேட் வியாபாரமும் செய்து வந்துள்ளார். சம்பவத்தன்று இரவு, மளிகை கடையில் சிவ ஞானம் வியாபரம் செய்து கொண்டிருந்த, கடை அருகே, பாஸ்புட் கடை நடத்திய வரும், சரவணன், மற்றும் கூட்டாளிகள் கஞ்சா போதையில் கடையில் கூச்சலிட்டுள்ளனர்.

இதை சிவஞானம் தட்டிக்கேட்டுள்ளார். ஆத்திரம் அடைந்த சரவணனும் அவரது கூட்டாளிகளும் வேண்டுமென்றே சிவஞானத்தை வம்புக்கு இழுத்து தகராறில் ஈடுபட்டுள்ளனர்.

சிவஞானம் சத்தம் போட்டதால், ஆத்திரம் அடைந்த கும்பல், தாங்கள் குடித்துக்கொண்டிருந்த பீர் பாட்டில்களை உடைத்து, சிவஞானம் மீது தாக்கியுள்ளனர். இதனையடுத்து அதிர்ச்சியடைந்த, சிவஞானம் கடையை விட்டு சாலையில் ஓடிக்கொண்டே இருந்துள்ளார்.

ஆனால், இவரை ஓட ஓட விரட்டிய அந்த கும்பல், பீர் பாட்டில்களால் தாக்கினர். இதனால் நிலைதடுமாறிய சிவஞானம் கீழே விழுந்துள்ளார். அப்போது சுற்றி வளைத்த கும்பல், திடீரென கத்தியை எடுத்து தலை மற்றும் கழுத்தில் குத்தியுள்ளனர்.

இதில் பலத்த காயமடைந்த சிவஞானம், சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தார். பின்னர் அந்த போதை கும்பல் அங்கிருந்து தப்பி ஓடியது.

இகு குறித்து தகவலறிந்த தாலுகா போலீசார், அங்கு விரைந்து சென்று கொலையான சிவஞானத்தின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்த கொலை தொடர்பாக சரவணன் உள்ளிட்டோரை தேடிவந்தனர். இரவு சரவணன், ஆபேல் மற்றும் ஐயப்பன் ஆகிய மூவரும் தாலுகா காவல் நிலையத்தில் சரணடைந்தனர்.

கஞ்சா போதை மற்றும் ரியல் எஸ்டேட் விவகாரம் உள்ளிட்ட பல்வேறு சம்பவங்களால் காஞ்சிபுரம் மாவட்டத்தில் சில மாதங்களாக கூலிப்படையினர் தொடர்ச்சியாக கொலை சம்பவங்களில் ஈடுபட்டு வருவது பொதுமக்களிடையே அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.