Indo-US joint research projects discussed: டெல்லி ஐஐடி.,யில் கூட்டு ஆராய்ச்சி, மேம்பாடு குறித்து ஆலோசனை

புது டெல்லி: Indo-US joint research projects discussed: இந்திய- அமெரிக்க நிபுணர்களுடன் கூட்டு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் திட்டங்கள் குறித்து ஆலோசனை நடைபெற்றது.

டிஎஸ்டி-என்எஸ்எஃப் கூட்டு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் திட்டங்கள் குறித்த பயிலரங்கில், தொழில்நுட்ப புத்தாக்க மையங்கள் மூலம் செயல்படுத்தப்படும் கூட்டு ஆராய்ச்சி திட்டங்களுக்கான சிறந்த வழிமுறைகளை வெளிக்கொணர, இந்தியா மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த வல்லுநர்கள் விவாதித்துள்ளனர்.

டிஎஸ்டி-யுடன் இணைந்து தில்லி ஐஐடி ஏற்பாடு செய்திருந்த இந்தப்பயிலரங்கில் இந்திய- அமெரிக்க நிபுணர்கள் பங்கேற்று, கூட்டு ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு குறித்து ஆலோசனை நடத்தினர்.

டிஎஸ்டியின் மூத்த ஆலோசகர் டாக்டர் அகிலேஷ் குப்தா, அமெரிக்கா எங்களின் இயற்கையான பங்குதாரர். குறிப்பாக அறிவியலில் நாங்கள் பாரம்பரியமாக கூட்டு சேர்ந்துள்ளோம், கூட்டுத் திட்டங்களின் மூலம் நிறுவன அளவில், அரசு மட்டத்தில் மற்றும் மக்கள் மட்டத்தில் கூட ஈடுபாடு மிகவும் ஆழமாக இருக்கும்,” என்று கூறினார்.

ஆறு தொழில்நுட்ப புத்தாக்க மையங்கள் என்எஸ்எப் ஆதரவு நிறுவனங்களுடன் கூட்டு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்காக அடையாளம் காணப்பட்டுள்ளன. இந்த திட்டங்கள் இரு நாடுகளிலும் இருக்கும் ஆராய்ச்சி திட்டங்களுக்கு சர்வதேச ஒத்துழைப்பின் கூறுகளை சேர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளன.

இந்தியாவுடன் கூட்டு ஆராய்ச்சிகளை மேற்கொள்வதில் அமெரிக்கா உறுதியுடனும் பெருமையுடனும் உள்ளது. இந்தத் திட்டங்கள் அபிலாஷைக்குரியதாகவும், சமூகப் பிரச்சினைகளைத் தீர்க்கக்கூடியதாகவும் இருக்க வேண்டும்” என்று என்எஸ்எப் இயக்குநர் டாக்டர். சேதுராமன் பஞ்சநாதன் கூறினார்.

அமெரிக்காவின் தேசிய அறிவியல் அறக்கட்டளையின் பிரதிநிதிகள் மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் சந்திப்பு:
தற்பொழுது இந்தியாவிற்கு விஜயம் செய்துள்ள அமெரிக்காவின் தேசிய அறிவியல் அறக்கட்டளையின் பிரதிநிதிகள் குழு இன்று மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை ( தனிப்பொறுப்பு), புவி அறிவியல் (தனிப்பொறுப்பு); பிரதமர் அலுவலகம், பணியாளர்கள், பொதுமக்கள் குறைதீர்ப்பு, ஓய்வூதியங்கள், அணுசக்தி மற்றும் விண்வெளித்துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்கைச் சந்தித்தது. இரு நாடுகளுக்கு இடையிலான இருதரப்பு ஒத்துழைப்பை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வதற்கான வழிகள் குறித்து அக்குழு விவாதித்தது.

அமெரிக்காவின் தேசிய அறிவியல் அறக்கட்டளையின் சர்வதேச அறிவியல் மற்றும் பொறியியல் அலுவலகத் தலைவர் டாக்டர். கேந்த்ரா ஷார்ப், என்எஸ்எப் பணியாளர் குழு தலைவர் திரு பிரையன் ஸ்டோன், சர்வதேச அறிவியல் மற்றும் பொறியியல் அலுவலக திட்ட இயக்குநர் டாக்டர் பிரிட்ஜெட் துராக ,அமெரிக்க தேசிய அறிவியல் அறக்கட்டளையின் இயக்குநர் சேதுராமன் பஞ்சநாதன் உள்ளிட்டோர் இந்த கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

பிரதிநிதிகள் நிலை பேச்சுவார்த்தையின் போது, டாக்டர் ஜிதேந்திர சிங் கூறுகையில், இரு தரப்பும் ஏற்கனவே துறைகளை அடையாளம் கண்டுள்ளன, சுகாதாரம், தொழில்நுட்பம், விண்வெளி, பூமி மற்றும் கடல் அறிவியல், ஆற்றல், வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் மற்றும் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கல்வியில் ஒத்துழைப்பு போன்ற துறைகளில் ஒத்துழைப்பு உள்ளது. விஞ்ஞான கண்டுபிடிப்புகள் மற்றும் தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள் மற்றும் உலகளாவிய நலனுக்காக இந்த இணைப்புகளை வலுப்படுத்தவும் பயன்படுத்தவும் நேரம் வந்துவிட்டது என்றும், இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் நீண்டகால தொடர்பு மற்றும் ஆர்வத்தை பகிர்ந்துள்ளது என்றும் சுட்டிக்காட்டினார்.

அமெரிக்காவின் தேசிய அறிவியல் அறக்கட்டளை இயக்குனர் மற்றும் தூதுக்குழுவின் தலைவர் டாக்டர் சேதுராமன் பஞ்சநாதன் இரண்டு நாள் சிந்தனை அமர்வில் அடையாளம் காணப்பட்ட பாடங்கள் தர்க்கரீதியான முடிவுக்கு கொண்டு செல்லப்படும் என்று டாக்டர் ஜிதேந்திர சிங்கிடம் உறுதியளித்தார். செயற்கை நுண்ணறிவு, பயோடெக்னாலஜி, புவி அறிவியல் மற்றும் வானியற்பியல் போன்ற துறைகளில் ஒத்துழைப்பின் புதிய வழிகளைக் கண்டறியவும் அவர் உறுதியளித்தார்.