Groin Injury Virat Kohli : இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் விராட் கோஹ்லி விளையாடவில்லை

இந்திய அணி நிர்வாகத்திற்கு மூத்த வீரருக்கு ஓய்வு கொடுப்பதற்கு விருப்பமில்லை, எனவே அவர் லார்ட்ஸ் (ஜூலை 14) மற்றும் மான்செஸ்டர் (ஜூலை 17) நடைபெற உள்ள இரண்டு போட்டிகளில் விளையாடுவார்.

தில்லி: Groin Injury Virat Kohli : இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோஹ்லியின் ஃபார்ம் குறித்த விவாதத்திற்கு பிறகு அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இடுப்பு ஏற்பட்டுள்ள காயத்தால் அவதிப்பட்டு வரும் விராட் கோஹ்லி, இன்று தொடங்கும் இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இருந்து விலகுவார் என்று கூறப்படுகிறது.

இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டி20 போட்டியின் போது, ​​விராட் கோஹ்லிக்கு இடுப்பு பகுதியில் வலி ஏற்பட்டது. இதன் பின்னணியில் ஓய்வெடுக்குமாறு மருத்துவர் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார். இந்த நிலையில் முதல் ஒருநாள் போட்டியில் கோஹ்லி (Virat Kohli) களமிறங்கமாட்டார். ஆனால், விராட் கோஹ்லியை அணியில் இருந்து விலக்கி வைக்க இந்திய அணியின் நிர்வாகத்திற்கு விரும்பவில்லை. இந்த‌ காரணத்திற்காக, அவர் லார்ட்ஸ் (ஜூலை 14) மற்றும் மான்செஸ்டர் (ஜூலை 17) ஆகிய இரண்டு போட்டிகளில் விளையாடுவார்.

ஓய்வு காரணமாக இந்திய அணி பேருந்தில் நாட்டிங்ஹாமில் இருந்து லண்டனுக்கு விராட் கோலி செல்லவில்லை. மருத்துவ பரிசோதனை காரணமாக அவர் பயணம் செய்யவில்லை என்று கூறப்படுகிறது. லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் ஷிகர் தவான், ஷர்துல் தாக்கூர், பிரசித்தி கிருஷ்ணா ஆகியோர் மட்டுமே பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்காவில் நடைபெறவிருந்த மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான இந்திய அணி தேர்வு ஒத்திவைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் அணி தேர்வு இன்று நடைபெறும் என தெரிகிறது. இதனிடையே, இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா விராட் கோஹ்லிக்கு (Virat Kohli)ஆதரவு தெரிவித்துள்ளார்.

ஆனால் டி20 அணியில் கோஹ்லியின் இடம் குறித்து முன்னாள் ஜாம்பவான்களான கபில்தேவ், வீரேந்திர சேவாக் உள்ளிட்ட நிபுணர்கள் பலமுறை கேள்வி எழுப்பியுள்ளனர். மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான தொடரில் இருந்து ஓய்வு பெறுமாறு விராட் கோஹ்லியிடம் ஏற்கனவே கேட்டுக் கொண்டதாக கூறப்படுகிறது. எனவே, மேற்கிந்திய அணிக்கு எதிரான தொடரில் அவருக்கு ஓய்வு அளிக்கப்பட வாய்ப்புள்ளது.