South Africa win :இந்தூரில் நடைபெற்ற 3 வது டி20 போட்டியில் தென் ஆப்ரிக்கா ஆறுதல் வெற்றி

3 வது டி20 போட்டியில் ரிலீ ரோஸ்ஸோவ் தனது அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதன் காரணமாக தென் ஆப்ரிக்கா 49 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்த உதவியது.

இந்தூர்: Consolation win for South Africa in the 3rd T20 at Indore ; இந்தியா – தென் ஆப்ரிக்கா அணிகளுக்கு இடையே இந்தூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற 3வது டி20 போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி ஆறுதல் வெற்றி பெற்றது. இந்தியா 49 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. 228 ரன்கள் இலக்கை துரத்திய இந்திய‌ அணி 178 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

இந்தியா – தென் ஆப்ரிக்கா 3 வது டி20 போட்டியில் ரிலீ ரோஸ்ஸோவ் தனது அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதன் காரணமாக தென் ஆப்ரிக்கா 49 ரன்கள் வித்தியாசத்தில் (South Africa win by 49 runs) இந்தியாவை வீழ்த்த உதவியது. ரிலீ ரோஸ்ஸோவ் 48 பந்துகளில் 100 ரன்களை விளாச, தென் ஆப்ரிக்கா 20 ஓவர்களில் 227/3 ரன்களை குவித்தது. தோல்வியடைந்தாலும் தொடரை 2-1 என இந்தியா கைப்பற்றியது. முன்னதாக முன்னதாக டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தென் ஆப்பரிக்காவை பேட்டிங் செய்ய அழைத்தார். இதனைத் தொடர்ந்து முதல் பேட்டிங் செய்த தென் ஆப்ரிக்கா அணியின் டி காக் மற்றும் ரோஸ்ஸோவ்ஆகியோரின் உறுதியான பேட்டிங் தென் ஆப்ரிக்காவை வலிமையான இலக்கை பதிவு செய்ய உதவியது.

இதனையடுத்து , 228 ரன்கள் என்ற இலக்கை நோக்கி களமிறங்கியது இந்திய அணி . இந்திய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக அமைந்தது. தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய கேப்டன் ரோஹித் சர்மா (Captain Rohit Sharma) ரன் எடுக்காமலும், ஸ்ரேயஸ் ஐயர் 1 ரன்னிலும் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தனர். இதனையடுத்து, ரிஷப் பந்த் உடன் ஜோடி சேர்ந்தார் தினேஷ் கார்த்திக். இந்த இணை சீராக ரன்கள் குவித்த போதிலும் பந்த் 27 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

தினேஷ் கார்த்திக் ஒரு புறம் அதிரடியாக ஆட மறுமுனையில் இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்த வண்ணம் இருந்தனர். சூர்ய குமார் யாதவ் 8 ரன்னிலும் , அக்சர் படேல் 9 ரன்னிலும் அஸ்வின் 2 ரன்னிலும் ஆட்டமிழந்து வெளியேறினர் . அதிரடியாக விளையாடிய தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் 21 பந்துகளில் 46 ரன்கள் எடுத்து வெளியேறினார். அதில் 4 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள் அடங்கும். பின்வரிசை ஆட்டக்காரர்களில் தீபக் சஹார் (Deepak Sahar) 17 பந்துகளில் அதிரடியாக 31 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். தொடர்ச்சியாக விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி 18.3 ஓவர்களில் 178 ரன்களுக்கு தனது அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன்மூலம் , 49 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. ஏற்கனவே இந்திய அணி தொடரைக் கைப்பற்றிய நிலையில் 3 வது டி20 போட்டியில் வென்றதன் மூலம் தென் ஆப்ரிக்க அணி ஆறுதல் வெற்றியைப் பதிவு செய்தது .