Express special train operation : பண்டிகையையொட்டி எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில் இயக்கம்

பெங்களூரு: Express special train operation on the occasion of the festival : பண்டிகையையொட்டி தென்மேற்கு ரயில்வே ஒருவழி எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில்களை இயக்க முடிவு செய்துள்ளது.


இது குறித்து தென் மேற்கு ரயில்வே (South Western Railway) வெளியிட்ட செய்தி குறீப்பு: பயணிகளின் கூடுதல் நெரிசலைக் குறைக்க மைசூரிலிருந்து எஸ்எஸ்எஸ் ஹூப்பள்ளிக்கு விஜயதசமியன்று எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படுகிறது. அதன் விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

  1. ரயில் எண். 06239 மைசூரு – எஸ்எஸ்எஸ் ஹுப்பள்ளி (Mysore – SSS Hubballi) ஒருவழி எக்ஸ்பிரஸ் சிறப்பு: –
    ரயில் எண். 06239 மைசூரு – எஸ்எஸ்எஸ் ஹுப்பள்ளி ஒருவழி எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில் 05.10.2022 (புதன்கிழமை) அன்று இரவு 11:00 மணிக்கு மைசூருவில் இருந்து புறப்படும்.
    மறுநாள் காலை 08:45 மணிக்கு எஸ்எஸ்எஸ் ஹுப்பள்ளி வந்தடையும்.

இந்த ரயில் மாண்டியா, கெங்கேரி, கேஎஸ்ஆர் பெங்களூரு, யஷ்வந்த்பூர், தும்கூரு, அரிசிகெரே, கடூர், தாவண‌கரே, ராணிபென்னூர் மற்றும் ஹாவேரி (Tumkur, Arsikere, Kadur, Davanagere, Ranibennur and Haveri0ஆகிய ரயில் நிலையங்களில் நிறுத்தப்படும். ரயிலில் 1- ஏசி இரண்டு அடுக்கு, 3 – ஏசி மூன்றடுக்கு, 10 – இரண்டாம் வகுப்பு, ஸ்லீப்பர் மற்றும் 2 – இரண்டாம் வகுப்பு லக்கேஜ் மற்றும் பிரேக்-வேன்கள்/திவ்யாங்ஜன் பெட்டிகள் (மொத்தம் 16 பெட்டிகள்) ஆகியவை இருக்கும்.

  1. ரெயில்களை ஒழுங்குபடுத்துதல் / திசை திருப்புதல்

ட்ராஃபிக் மற்றும் OHE பிளாக்குகள் காரணமாக பின்வரும் ரயில்கள் ஒழுங்குபடுத்தப்படும் அல்லது வேறு வழியில் திருப்பப்படும்.

  1. ரயில் எண். 12781 மைசூரு – ஹஸ்ரத் நிஜாமுதீன் எக்ஸ்பிரஸ் (Mysore – Hazrat Nizamuddin Express), 07.10.2022, 14.10.202221.10.2022 ஆகிய தேதிகளில் புனேயில் 2.15 மணிநேரம் தாமத்திற்கு பிறகு பயணத்தை தொடங்கும்.
  2. ரயில் எண். 12630 ஹஸ்ரத் நிஜாமுதீன் – மைசூரு எக்ஸ்பிரஸ் ரயில் ரத் நிஜாமுதீன் 21.10.2022 அன்று புனே பிரிவில் 45 நிமிடங்களுக்கு தாமத்திற்கு பிறகு பயணத்தை தொடங்கும்.

திசைமாற்றம்:

  1. ரயில் எண். 22685 யஸ்வந்த்பூர் – சண்டிகர் எக்ஸ்பிரஸ் (Yeswantpur – Chandigarh Express) 19.10.2022 அன்று மீராஜ், குர்துவாடி மற்றும் டவுண்ட் வழியாக இயக்கப்படும்.
  2. ரயில் எண். 17317 எஸ்எஸ்எஸ் ஹுப்பள்ளி – தாதர் எக்ஸ்பிரஸ் எஸ்எஸ்எஸ்
    04.10.2022 முதல் 23.10.2022 வரை ஹுப்பள்ளியிலிருந்து பயணத்தைத் தொடங்குகி,மீராஜ், குர்துவாடி மற்றும் டவுண்ட் வழியாக இயக்கப்படும். சாங்லி, காரட் ஆகிய‌ நிறுத்தங்கள் தவிர்க்கப்படுகிறது.
  3. ரயில் எண். 12780 ஹஸ்ரத் நிஜாமுதீன் – வாஸ்கோடகாமா எக்ஸ்பிரஸ்
    20.10.2022 அன்று ஹஸ்ரத் நிஜாமுதீனிலிருந்து மீராஜ், குர்துவாடி வழியாக இயக்கப்படும்.
    சதாரா, காரட், சாங்லியில் இருந்து டான்ட்ஆகிய‌ நிறுத்தங்கள் தவிர்க்கப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.