Extension of time to apply for MBBS, BDS : எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க‌ அவகாசம் நீட்டிப்பு

சென்னை: Extension of time to apply for MBBS, BDS Medical Courses : எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ், ஆகிய இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கு விண்ணப்பிப்பதற்கான அவகாசம் வரும் 6 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக மருத்துவக் கல்வி தேர்வுக் குழுச் செயலாளர் மருத்துவர் ஆர்.முத்துச்செல்வன் தெரிவித்தார்.

தமிழகத்தில் 37 அரசு மருத்துவக் கல்லூரிகளில் 5,050 எம்.பி.பி எஸ். இடங்கள், இரண்டு அரசு பல் மருத்துவக் கல்லூரிகளில் 200 பி.டி.எஸ்.இடங்கள் உள்ளன (5,050 MBBS seats in 37 Government Medical Colleges in Tamil Nadu. Seats There are 200 BDS seats in two Government Dental Colleges). அதில், 15 சதவீத இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு போக, மீதமுள்ள இடங்கள் மாநில அரசுக்கு இருக்கிறது. அதே போல், 20 தனியார் மருத்துவக் கல்லூரிகளின் 3,050 எம் . பி.பி.எஸ் . இடங்களில் 1,610 இடங்களும், 20 தனியார் பல் மருத்துவக் கல்லூரிகளின் 1960 பி.டி.எஸ். இடங்களில் 1254 இடங்கள் மாநில அரசுக்கு ஒதுக்கப்படுகிறது .

தனியார் மருத்துவம் மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகளில் மீதமுள்ள இடங்கள் நிர்வாக ஒதுக்கீடு ஆகும். இந்நிலையில் மாணவர் சேர்க்கைக்கு இணையழியில் விண்ணப் பிப்பது கடந்த செப்டம்பர் 12 ஆம் தேதி தொடங்கியது. நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ , மாணவிகள் www.tnhealth.tn.gov.in மற்றும் www.tnmedicalselection.org ஆகிய இணையதளங்களில் விண்ணப்பித்து வருகின்றனர். ஆன்லைனில் விண்ணப்பிப்பது அக்டோபர் 3 – ஆம் தேதிலை 5 மணியுடன் நிறைவடைய இருந்தலையில் மாணவர்களின் வேண்டுகோளை ஏற்று விண்ணப்பிக்கும் கால அவகாசம் அக். 6 ஆம் தேதிக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது (Extended to Oct. 6th).

மருத்துவக் கல்வி தேர்வுக் குழுச் செயலாளர் மருத்துவர் ஆர்.முத்துச்செல்வன் இது தொடர்பாக கூறியதாவது: அரசு மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு இதுவரை 38,676 பேர் பதிவு செய்துள்ளனர் (So far 38,676 people have applied for government and administrative quota seats). அதில், 33,738 பேர் விண்ணப்பங்களைச் சமர்ப்பித்துள்ளனர் என அவர் தெரிவித்தார்.