Puja for Milestone: மைல் கல்லுக்கு படையலிட்டு பூஜை செய்த மக்கள்; இணையத்தில் வைரல்

கோவை: People gathered and worshiped at the milestone. ஆயுத பூஜையை முன்னிட்டு சாலையோர மைல் கல்லுக்கு மக்கள் பூஜை செய்து வழிபாடு செய்தனர்.

புரட்டாசி மாதத்தில் வரக்கூடிய மகாளய அமாவாசை தினத்த்துக்கு அடுத்த நாள் தொடங்கி 9 நாள்கள் துர்கா தேவியை நினைத்து விரதமிருந்து வழிபட்டு நவராத்திரியை வட இந்தியாவில் கொண்டாடுகின்றனர். அதே நேரம் தமிழ்நாட்டில் வீடுகளில் நவராத்திரி கொலு வைக்கப்பட்டும், நவராத்திரியின் 9ம் நாளான ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை, அதற்கடுத்த நாளான விஜய தசமி விழாக்கள் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன.

பொதுவாக ஆயுத பூஜை நாள்களில் தொழிலுக்கு பயன்படுத்தும் பொருள்களையும் அத்தியாவசியப் பொருள்களையும் வைத்து மக்கள் வணங்குவர். இதனால் அஸ்திர பூஜை என்றும் ஆயுத பூஜை அழைக்கப்படுகிறது.

கோவை மாவட்டம், தொண்டாமுத்தூர் பூலுப்பட்டி அருகே சாலையோர மயில் கல்லுக்கு சிறப்பு பூஜை செய்து வாழை இலை போட்டு படையலிட்டு ஊர் பொதுமக்கள் வழிபாடு செய்தது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

நாடு முழுவதும் ஆயுத பூஜை சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. வாகனங்கள், தொழில் செய்வதற்கு உதவி செய்யும் கருவிகள், இயந்திரங்கள், பாடப் புத்தகங்கள் எனச் சரஸ்வதி முன்பாக அவற்றை வைத்துப் படையலிடுவது வழக்கம். நிறுவனங்களில் ஆயுத பூஜையை வேலை நாட்களிலேயே தொழிலாளர்களோடு கொண்டாடுவார்கள்.

அந்த வகையில் நேற்றே பெரும்பாலான நிறுவனங்களில் ஆயுத பூஜை கொண்டாடப்பட்டது. இந்நிலையில் நேற்று சாலை ஓரத்தில் வைக்கப்பட்டிருக்கும் மைல் கல்லுக்கு ஆயுத பூஜையை முன்னிட்டு படையலிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை தொண்டாமுத்தூர் பகுதியில் உள்ள பொதுமக்கள் ஆயுத பூஜையை வித்தியாசமாக கொண்டாடியுள்ளனர். பேரூர் சிறுவாணி சாலை பூலுவபபட்டி பகுதியில் அமைந்துள்ள பழைய மைல் கல்லை எடுத்து புதிய மைல்கல் வைத்து சிறப்பு பூஜை செய்தனர். அத்துடன் வாழை இலையில் படையல் வைத்து வழிபாடும் நடத்தினர்.

ஆயுத பூஜையையொட்டி மைல் கல்லுக்கு புது வண்ணம் பூசி, வாழை மரக்கன்றுகள் கட்டி, சந்தன பொட்டு, திருநீர், குங்குமம் பூசி, மாலை அணிவித்து அதனை தொடர்ந்து சிறப்பு பூஜைகள் செய்து வழிபாடு செய்ததாக அந்த பகுதி மக்கள் கூறினர்.