Anahat Singh’s great success in squash : காமன்வெல்த் விளையாட்டு போட்டி: ஸ்குவாஷில் அனஹாத் சிங் அபார வெற்றி

Image Credit: Twitter.

இங்கிலாந்து: Commonwealth Games : காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் ஸ்குவாஷில் தில்லியைச் சேர்ந்த அனஹாத் சிங் அபார வெற்றி பெற்றுள்ளார்.

இங்கிலாந்து நாட்டின் பர்மிங்காம் (Birmingham) நகரில் வெள்ளிக்கிழமை (ஜூலை 29) முதல் காமன்வெல்த் விளையாட்டு போட்டி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் இந்தியாவை சேர்ந்த 14 வயது இளம் வீராங்கனை அனஹாத் சிங் அஸ்குவாஷில் அபார விளையாடி வெற்றி பெற்றுள்ளார்.14 வயதான அனஹாத் சிங் காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளில் விளையாடச் சென்ற வீரர்களில் மிகவும் இளையவராவார்.

காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளில் இடம்பெற்றுள்ள அனைத்து விளையாட்டு போட்டிகளிலும் இந்திய வீரர்கள், வீராங்கனைகள் சிறப்பாக விளையாடி வருகின்றனர். ஸ்குவாஷ் (squash match) போட்டியில் விளையாடிய‌ 14 வயதே ஆன இந்தியாவின் இளம் வீராங்னை அனஹாத் சிங், அறிமுக போட்டியிலேயே எதிரணி வீராங்கனையான ஜடா ரோஸ் என்பவரை 11-5, 11-2, 11-0 என்ற கணக்கில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றுள்ளார்.

இந்த போட்டியில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய அனஹாத் சிங்,தன்னை எதிர்த்து விளையாடிய‌ ஜடா ரோஸை (Jada Rose) ஆதிக்கம் செலுத்த அனுமதிக்கவில்லை. தில்லியைச் சேர்ந்த அனஹாத்சிங், தற்போது 9 ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவர் இந்த இளம் வயதிலேயே 50 க்கும் அதிகமான போட்டிகளில் சாம்பியன் பட்டங்களை வென்றுள்ளார்.

யுஎஸ் ஜூனியர் ஓபன் (US Junior Open), பிரிட்டிஷ், ஜெர்மன், டச்சு ஜூனியர் ஓபன் போட்டிகள், ஏசியன் சாம்பியன்ஷிப் ஆகிய பட்டங்களை வென்றுள்ளார். 2019 ஆம் ஆண்டில் பிரிட்டிஷ் ஜூனியர் ஸ்குவாஷ் ஓபன், 2021 ஆம் ஆண்டில் யுஎஸ் ஜூனியர் ஸ்குவாஷ் ஓபன் ஆகிய 2 பட்டங்களையும் வென்ற முதல் வீராங்கனை என்ற சாதனையை படைத்துள்ளார் அனஹாத் சிங். இந்தியாவின் ஸ்குவாஷ் அண்டர் 15 தர வரிசையில்முதலாவது வீராங்கனையாக‌ அனஹாத் சிங் உள்ளார்.

14 வயதான அனாஹத் சிங்கிற்கு 2022-ஆம் ஆண்டின் காமன்வெல்த் விளையாட்டிற்கு பயிற்சி அளித்த‌ பயிற்சியாளர் ரித்விக் பட்டாச்சார்யா, உலக ஜூனியர் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப்பில் பத்து சப்-ஜூனியர் சர்வதேச பட்டங்களை வென்று, தன்னை விட நான்கு வயது வரை மூத்த வீராங்கனைகளில் இந்தியாவின் நம்பர் 1 (India’s No. 1) இடத்தைப் பிடித்த அனாஹத், இந்திய ஸ்குவாஷ் விளையாட்டின் எதிர்காலமாக திகழ்கிறார்.

இருப்பினும், ஒரு 14 வயதான ஸ்குவாஷ் வீரர் முதல் முறையாக தொழில்முறை ஸ்குவாஷ் சுற்றுப்பயணத்தில் சிறந்த விளையாட்டு வீரர்களை எதிர்கொள்வாரா என்ற சந்தேகம் இருந்தது. ஆனால் அனாஹத் காமன்வெல்த் போட்டிகளில்சிறப்பாக விளையாடி இந்தியாவிற்கு பெருமை சேர்ந்த்துள்ளார் (He has made India proud). அவருக்கு நான் பயிற்சி அளித்த பயிற்சியாளர் என்பதால் எனக்கும் பெருமைதான். அனாஹட்டின் விரைவான‌ அசைவு மற்றும் ரப்பரை இவ்வளவு துல்லியத்துடன் வளைந்து தாக்கும் திறன் ஆகியவை கடவுள் அவருக்கு அளித்த‌ வரம் என்றார்.