Minister M. Subramanian : தமிழகத்தில் குரங்கு அம்மை பாதிப்பு இருந்தால் நாங்களே தெரிவிப்போம் : அமைச்சர் மா.சுப்ரமணியன்

FILE PHOTO.

சென்னை: monkey pox in Tamil Nadu : தமிழகத்தில் குரங்கு அம்மை பாதிப்பு இருந்தால் நாங்களே தெரிவிப்போம் என்று சுகாதார நலத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்தார்.

சென்னையில் சனிக்கிழமை ஆரம்ப சுகாதார நிலை புற்றுநோய் கண்டறியும் சிறப்பு முகாமை தொடக்கி வைத்து பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியது: தமிழகத்தில் யாருக்கும் இது வரை குரங்கு அம்மை பாதிப்பு இல்லை (No one in Tamil Nadu has been infected with monkey pox so far). எனவே அது குறித்து யாரும் அச்சப்பட தேவையில்லை. தமிழகத்தில் குரங்கு அம்மை பாதிப்பு இருந்தால், நாங்களே தெரிவிப்போம்.

வெளிநாட்டிலிருந்து இந்தியா, குறிப்பாக தமிழகம் வருபவர்களை தீவிர பரிசோதனை செய்து அனுப்பிய பின்னரும், அவர்களை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம் (We are constantly monitoring). தோல்களில் கொப்புளங்கள் தென்பட்டால் அந்த நபரை தனிமைபடுத்தவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பன்னாட்டு விமான நிலையங்கள் உள்ள சென்னை, கோயம்பத்தூர், திருச்சி, மதுரை உள்ளிட்ட ஊர்களில் அரசு மருத்துவமனைகளில் (government hospitals) 10 படுக்கைகளுடன் உள்ள மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. குரங்கு அம்மை பாதிப்பு ஏற்பட்டால் உடனடியாக சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். குரங்கு அம்மை பாதிப்பு யாருக்கும் இல்லாத போது அதைப் பற்றியே கேள்வி எழுப்புவது ஏற்புடையது அல்ல‌ என்றார்.

கரோனாவைத் தொடர்ந்து சர்வதேச அளவில் அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் குரங்கு அம்மை தொற்று வேகமாக பரவி வருகிறது. தேசிய அளவில் கேரளாவில் (Kerala) முதன் முறையாக குரங்கு அம்மை பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. அங்கு 4 பேர் குரங்கு அம்மை தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

குரங்கு அம்மை ஒரு வைரஸ் ஜூனோடிக் தொற்று அதாவது விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு இது பரவுகிறது. மனிதர்களிடமும் ஒருவரிடமிருந்து ஒருவருக்கு குரங்கு அம்மை பரவும். குரங்கு அம்மை கடுமையான நோய் அல்லது அதிக ஆபத்தில் இருப்பவர்கள், கர்ப்பிணிகள், குழந்தைகள் (Pregnant women, children) மற்றும் நோயெதிர்ப்பு குறைபாடுள்ள நபர்களை அதிக அளவில் பாதிக்கும்.

காய்ச்சல், தலைவலி, தசைவலி, முதுகுவலி, குறைந்த ஆற்றல் மற்றும் வீங்கிய நிணநீர் முனைகள் ஆகியவை குரங்கு அம்மையின் பொதுவான அறிகுறிகளாகும். இது தொடர்ந்து அல்லது இரண்டு முதல் மூன்று வாரங்கள் வரை நீடிக்கும். சொறி முகம், உள்ளங்கைகள், உள்ளங்கால்கள், கண்கள், வாய், தொண்டை, இடுப்பு(Eyes, mouth, throat, groin) மற்றும் பிறப்புறுப்பு மற்றும் உடலின் குதப் பகுதிகளில் காணப்படும். புண்களின் எண்ணிக்கை ஒன்று முதல் பல ஆயிரம் வரை இருக்கலாம். காயங்கள் தட்டையாகத் தொடங்குகின்றன.

பின்னர் அவை மேலோடு, காய்ந்து விழும் முன் திரவத்தால் நிரப்பப்படுகின்றன, அதன் கீழ் புதிய தோல் அடுக்காக‌ உருவாகிறது. காயங்கள் அனைத்தும் மேலோட்டமாகி, சிரங்குகள் உதிர்ந்து, தோலின் கீழ் ஒரு புதிய அடுக்கு உருவாகும் வரை மக்கள் தொற்றுடன் இருப்பார்கள். குரங்கு அம்மை பாதிப்பு இருப்பவர்கள் சுகாதாரப் பாதுகாப்பு வழங்குநர் (Health care provider)அல்லது சம்பந்தப்பட்ட‌ மருத்துவர்களிடம் சென்று ஆலோசனை, சிகிச்சை பெறுவது அவசியம்.