Customs seized gold worth Rs. 20 lakhs : ரூ. 20 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்தனர்

தில்லி:தில்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்திற்கு (At Indira Gandhi International Airport) ரியாத்தில் இருந்து இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்திற்கு வந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் பரிசோதனை செய்தனர். விமான நிலையத்தில் பச்சை சிக்ன‌லை கடந்த பின்னர் சர்வதேச வருகை மண்டபத்தின் புறப்படும் வாயில் அருகே வந்த பயணி ஒருவரை சுங்கத்துறை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.

சோதனையில் பயணி ஒருவரிடம் ரூ. 20 லட்சம் மதிப்புள்ள 466 கிராம் எடையுள்ள தங்கத்தை (20 lakhs of gold weighing 466 grams) சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட தங்கம் எல்இடி எமர்ஜென்சி லைட்டில் 466 கிராம் தங்கம் மறைத்து வைக்கப்பட்டு இருந்தது தெரிய வந்தது. இதனையடுத்து பிடிபட்ட தங்கத்தை சுங்கத்துறை சட்டம் 1962 பிரிவு 110ன் கீழ் பறிமுதல் செய்யப்பட்டது. தங்கத்தை கடத்தி வந்த‌ பயணியை, 104 வது சட்டப் பிரிவின் கீழ் கைது செய்தனர்.

அண்மையில், தில்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்திற்கு கென்யா நாட்டிலிருந்து வந்த இரண்டு ஆண் பயணிகளிடமிருந்து ரூ. 7.5 கோடி மதிப்புள்ள தங்கத்தை (7.5 crore worth of gold) சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அவர்கள் இருவரும் நைரோபியிலிருந்து அடிஸ் அபாபா வழியாக தில்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்திற்கு வந்துள்ளனர். இங்கு அவர்களை தடுத்து நிறுத்தி சோதனை செய்தப் போது, சிறப்பான முறையில் தயாரிக்கப்பட்ட பாக்கெட்டுகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த மொத்தம் 15.57 கிலோ எடையுள்ள 19 தங்கக் கட்டிகளை பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் மதிப்பு சுமார் ரூ. 7.5 கோடியாகும்.

விசாரணையில், இருவரில் ஒருவர், தான் இந்தியாவிற்கு, இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தின் மூலமாக‌ ஐந்து முறைக்கும் மேல் வந்ததாகவும், வரும் ஒவ்வொரு முறையும் தங்கத்தை கடத்தி வந்த‌தாகவும் ஒப்புக்கொண்டார். இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தின் சுங்கத்துறை அதிகாரிகள் (Customs officials) கூறுகையில், தில்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் பொதுவாக கடத்தல்காரர்கள் தங்கம் கடத்தி வர விரும்பப்படும் இடமாக மாறியுள்ளது.

இதனைத் தடுக்க நாங்களும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம். ஆனாலும் தங்கம் கடத்துபவர்கள் நவீன முறையில் பல்வேறு வழிகளில் தங்கத்தை (smuggling gold) கடத்தி வருகின்றனர். நாங்களும் சந்தேகப்படும்படியான நபர்களையும், பொருள்களை சோதனை செய்கிறோம். ஆனாலும் சில முறை, கடத்தி வரப்படும் தங்கம் எங்கள் கண்களிலிருந்து தப்பி விடுகின்றனர். இதனையடுத்து தங்கம் கடத்தப்படுவதை தடுக்க தீவிரமாக சோதனையில் ஈடுபட முடிவு செய்துள்ளோம் என்றார்.

தில்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தை தொடர்ந்து மும்பை, கொல்கத்தா, சென்னை, பெங்களூரு விமான நிலையங்களிலும் தங்கம் கடத்துவது அதிகரித்துள்ளது. அதே போல கேரள மாநிலத்திற்கு அருகில் உள்ள மங்களூரு (Mangaluru) பஞ்பே விமான நிலையத்திலும் தங்கம் கடத்தி வருவது அதிகரித்துள்ளது. மங்களூரு விமான நிலையத்திற்கு துபாய் உள்ளிட்ட வளைகுடா நாடுகளிலிருந்து கேரளத்திற்கு வருபவர்கள் அதிக அளவில் தங்கம் கடத்தி வருவதாக சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.