Ramadoss demands to increase College Admission: அரசு கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கை 50% அதிகரிக்க ராமதாஸ் கோரிக்கை

சென்னை: Ramadoss said that the enrollment of students in government colleges should be increased by 50 percent. அரசு கல்லூரிகளில் மாணர்வகளின் சேர்க்கையை 50 சதவீதம் அதிகரிக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

மாநில அரசு பாடத்திட்டத்தில் படித்த 12ம் வகுப்பு மாணவர்கள் உயர் கல்வியில் சேர கடந்த மாதம் முதல் விண்ணப்பித்து வருகின்றனர். கலை அறிவியல் மற்றும் பொறியியல் கல்லூரிகளில் ஆன்லைன் வழியாக விண்ணப்பித்து வருகின்றனர்.

இந்நிலையில் சி.பி.எஸ்.இ., மற்றும் பிளஸ்-2 தேர்வு முடிவு தாமதமாக வெளியிட்டதால், அந்த மாணவர்கள் விண்ணப்பிக்க வசதியாக கல்லூரிகள், பல்கலை கழகங்களில் மாணவர்கள் சேர்க்கையை ஒத்திவைத்து யு.ஜி.சி. உத்தரவிட்டது. இதனைத்தொடர்ந்து கல்லூரிகளில் மாணவர்களின் சேர்க்கைக்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது.

இதனிடையே கடந்த 22-ந்தேதி சி.பி.எஸ்.இ. தேர்வு முடிவுகள்வெளியானது. இதனையடுத்து கல்லூரி சேர்க்கை 5 நாட்கள் அவகாசம் கொடுக்கப்பட்டது. அதன்படி 27-ந் தேதி வரை கல்லூரிகளில் சேர விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டது.

தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் சேர 2 லட்சத்து 5 ஆயிரம் பேர் விண்ணப்பித்து உள்ளனர். இதே போல 163 கலை அறிவியல் கல்லூரிகளில் 4 லட்சத்து 1494 பேர் நேற்று வரை விண்ணப்பித்து உள்ளனர்.

சி.பி.எஸ்.இ. மாணவர்கள் கடந்த 4 நாட்களாக பொறியியல் மற்றும் கலை அறிவியல் கல்லூரிகளில் சேர விண்ணப்பித்து வந்த நிலையில், 27-ந் தேதி மாலையுடன் அவகாசம் முடிவடைந்தது. கடந்த ஆண்டை விட இந்த வருடம் அதிகளவில் மாணவ, மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர். இதனால் மாணவர்கள் அறிவியல் மற்றும் கலைக்கல்லூரிகளில் சேர ஆர்வம் காட்டி வருகின்றனர்.

அதேபோல், சென்னை பல்கலைக்கழகம் மாணவர்கள் சேர்க்கைக்கான கால அவகாசத்தை நீட்டித்துள்ளது. இது தொடர்பாக பல்கலைக்கழக பதிவாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், நடப்பு கல்வி ஆண்டில் சென்னைப் பல்கலைக்கழக கட்டுப்பாட்டில் உள்ள கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேருவதற்கான அவகாசம் ஆகஸ்ட் 16 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

தகுதியின் அடிப்படையில் பல்கலைக்கழகத்தில் சேரும் மாணவர்கள் பல்கலைக்கழக விதிமுறைகளின் படி தேவையான நாட்களுக்கு வகுப்புகளுக்கு வருகை தரும் பட்சத்தில் தான் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவாார்கள் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம் எனக் கூறப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், பொறியியல் மட்டுமல்லாது கலை அறிவியல் படிப்புகளிலும் சேர மாணவர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளும் ஜூலை 22ஆம் தேதி வெளியானது. இதைத் தொடர்ந்து பொறியியல் படிப்பிற்கான மாணவர் சேர்க்கை கால அவகாசத்தை அண்ணா பல்கலைக்கழகம் ஐந்து நாள்கள் நீட்டித்தது. பொறியியல் படிப்பிற்கு விண்ணப்பிக்க அவகாசம் ஜூலை 27ஆம் தேதி முடிவடைந்த நிலையில், கடந்தாண்டை காட்டிலும் 35 ஆயிரத்துக்கும் அதிகமான மாணவர்கள் நடப்பாண்டில் விண்ணப்பித்துள்ளனர்.

இதேபோல், 163 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேருவதற்கு இதுவரை சுமார் 4 லட்சம் பேர் விண்ணப்பப்பித்துள்ளனர். எனவே, மாணவர்கள் மத்தியில் சேர்க்கைக்கான ஆர்வம் அதிகரித்துள்ளதால் சென்னை பல்கலைக்கழகம் விண்ணப்பத்திற்கான கால அவகாசத்தை ஆகஸ்ட் 16ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் கல்லூரி மாணவர்கள் சேர்க்கை குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 1.20 லட்சம் இடங்கள் மட்டுமே உள்ள நிலையில், அவற்றுக்கு 4.07 பேர் விண்ணப்பித்துள்ளனர். அவர்களில் 2.98 லட்சம் விண்ணப்பங்கள் தகுதியானவை. கடந்த ஆண்டை விட கூடுதலாக 70 ஆயிரம் பேர் விண்ணப்பித்திருக்கின்றனர்.

கொரோனாவால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால், பலருக்கு தனியார் கல்லூரிகளில் சேர வசதி இல்லை. அவர்கள் அரசு கல்லூரிகளில் சேர விரும்புவதும், அதிக எண்ணிக்கையிலான மாணவர்கள் பிளஸ் டூ தேர்ச்சி பெற்றிருப்பதும் தான் விண்ணப்பங்கள் அதிகரிக்கக் காரணம் ஆகும்.

பொருளாதார வசதியற்றவர்களுக்கு அரசு கல்லூரிகளில் இடம் மறுக்கப்பட்டால், அவர்களால் கண்டிப்பாக உயர்கல்வி கற்க முடியாது. இது உயர்கல்வி மாணவர் சேர்க்கை விகிதத்தை அதிகரிக்க வேண்டும் என்ற தமிழக அரசின் நோக்கத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும். அது தீர்வல்ல.

அரசு கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை இடங்களை குறைந்தது 50% அதிகரிக்க வேண்டும். அதற்கேற்ற வகையில் கட்டமைப்புகளையும், ஆசிரியர் எண்ணிக்கையையும் அதிகரிக்க வேண்டும். அதன் மூலம் அதிக எண்ணிக்கையில் ஏழை மாணவர்கள் அரசு கல்லூரிகளில் சேர்வது உறுதி செய்யப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.