TNK party name launch ceremony:டி என் கே கட்சி பெயர் அறிமுக விழா கட்சி பொதுக் கூட்டத்தில் முடிவு

Vazhavanthiyar invites TNK party name launch ceremony to July 20
Image credit to News Next Tamil

TNK party name launch ceremony: டி என் கே கட்சி பெயரை அறிவிக்கும் தேதி அறிவிப்பு விழா பொதுக்கூட்டம் கரூரில் உள்ள தனியார் ஹோட்டலில் நடந்தது இந்த பொதுக்கூட்டத்திற்கு தலைமை தாங்கிய கட்சியின் நிருவனர் வாழவந்தி சரவணன் கூறுகையில் டிஎன்கே கட்சி மாநிலம் முழுவதும் செயல்படட்டு வரும் நிலையில் இதற்கு முன்னதாக கட்சியின் சின்னம் செங்காந்தள் மலர் அறிவிக்கப்பட்டது அப்பொழுது அந்த நிகழ்ச்சி பிரமாண்டமாக கொண்டாடப்பட்டது அதேபோல கட்சியின் பெயர் அறிவிப்பு விழாவும் ஜூலை 20ஆம் தேதி ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே உள்ள விஜயமங்கலம் டோல்கேட் அருகே உள்ள பெரிய மைதானத்தில் பிரம்மாண்டமாக நடத்த ஏற்பாடு செய்யபட்டுள்ளது

Vazhavanthiyar invites TNK party name launch ceremony to July 20
Image credit to News Next Tamil
Vazhavanthiyar invites DNK party name launch ceremony to July 20
Image credit to News Next Tamil

நமது கட்சி குரல் இல்லாதவர்களுக்கு குரல் கொடுக்கும் கட்சியாக மாநிலத்தில் இயங்குவதற்கு முன் வந்து உள்ளது பஞ்சத்தில் இருக்கும் கஷ்டத்தில் இருப்பவர்களை மீட்டு அவர்களுக்கு வாழ்வுரிமையை பெற்றுக் கொடுப்பதே நமது கட்சியின் நோக்கமாகும நமது கட்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட சமுதாயத்தினர் இணைந்து கட்சிக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர் நூற்றுக்கும் மேற்பட்ட பிரிவினர் கட்சி பெயர் அறிவிப்பு விழாவில் பங்கேற்பார்கள்

Vazhavanthiyar invites DNK party name launch ceremony to July 20
Image credit to News Next Tamil Nadu

2026 சட்டமன்றத் தேர்தலில் நான்குக்கு மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்று 2031 ஆம் ஆண்டில் எதிர்க்கட்சியாகவும் 2036 ஆம் ஆண்டில் ஆளுங்கட்ச்சியாகவும் நமது கட்சி உருவெடுக்கும் உண்மையான சமூக நீதியை பேசி சமூகத்தை கட்டிக் காக்கும் கட்சியாக நமது கட்சி இருக்க வேண்டும் எனவும் ஆகையால் ஜூலை 20ஆம் தேதிக்கு முன்பாக கட்சியின் பெயரை சென்னையில் பத்திரிக்கையாளர்களை சந்தித்து முதலில் அறிவித்துவிட்டு பின்னர் கட்சி பெயர் அறிமுக விழாவை பிரம்மாண்டமாக கொண்டாடுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் இதற்கான அனைத்து தயார் வேலைகளும் நடந்து வருவதாக அவர் தெரிவித்தார் கட்சி பொதுக் கூட்டத்தில் கட்சியின் மாநில தலைவர் ஜெகன் செயலாளர் பாஸ்கரன் பொருளாளர் சசிகுமார் மற்றும் கட்சி மாநில உறுப்பினர்கள் மாவட்ட தலைவர்கள் பலரும் கலந்து கொண்டனர்

Vazhavanthiyar invites DNK party name launch ceremony to July 20
Image credit to News Next Tamil

வாழவந்தியார் இதுவரை மக்களின் சேவகராக ஆயிரக்கணக்கான இடங்களுக்கு சென்று பலரது இல்ல நிகழ்ச்சிகளிலும் மற்றும் குடும்ப கஷ்டங்களிலும் ஊர் திருவிழாவிலும் பங்கேற்று மக்கள் குரையை கேட்டு வருகிறார் அவர் தனியாக வள்ளி கும்மி குழுவை உருவாக்கி பல இடங்களில் திருவிழாக்கள் பண்டிகை காலங்களில் அவர் வள்ளி கும்மி நடனத்தை நடத்திக் கொடுத்து வருகிறார் கரூர் மாவட்டம் தென்னிலை அருகே உள்ள புளியம்பட்டியில் பிறந்தவர் அவரது மக்கள் சேவை பயணம் மிகவும் சிறப்பாக இருந்து வருகிறது செல்லும் இடங்கள் எல்லாம் மக்கள் அவரை நோக்கி முன்வந்து அவருக்கு பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்