Minister Dr. C.N.Aswattha Narayana : தேவைப்பட்டால் குற்றவாளிகளை என்கவுண்டர் செய்யவும் அரசு தயாராக உள்ளது: அமைச்சர் டாக்டர். அஸ்வத்த நாராயணா

ராமநகரில் வெள்ளிக்கிழமை அமைச்சர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது சில வெறியர்கள் மக்களின் பொறுமையை சோதிக்கிறார்கள் என்று அஸ்வத்த நாராயணா கூறினார்

ராம்நகர்: Minister Dr. C.N.Aswattha Narayana : கடற்கரை மாவட்டமான தென் கன்னடத்தை உலுக்கிய தொடர் கொலைகள் நடந்ததையடுத்து, மாநில அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளது. ராம்நகரில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் டாக்டர். அஸ்வத்த நாராயணா, சில மத வெறியர்கள் மக்களின் பொறுமையை சோதிக்கிறார்கள். அத்தகையவர்கள் தங்கள் கனவில் கூட இன்னொருவரை மீண்டும் கொல்ல பயப்பட வேண்டும். அந்த வகையில் கடுமையான நடவடிக்கை எடுப்போம். தேவைப்பட்டால் என்கவுன்டருக்கும் எங்கள் அரசு தயாராக உள்ளது என்று அவர் கடுமையாக பேசினார்.

மாநிலத்தில் வேறு யாரும் கொல்லப்படாமல் இருக்க ‘குண்டர்களை ஒடுக்கும் படையை’ உருவாக்க உள்துறை அமைச்சகம் திட்டமிட்டுள்ளது. தற்போது என்கவுன்டர் (Encounter) நேரம். இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் மாநிலத்தில் நடக்காமல் இருக்க அனைத்து விதமான கடுமையான நடவடிக்கைகளையும் மாநில அரசு மேற்கொள்ளும் என்றார்.

பாஜக அரசுக்கு எதிரான அக்கட்சி ஊழியர்களின் கோபம் குறித்து பேசிய அவர், “கட்சி ஊழியர்களின் கோபத்தை (The anger of the party workers) நாங்கள் மதிக்கிறோம். உத்தரபிரதேசத்தை விட‌ இன்னும் ஒருபடி மேலே சென்று, குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு தகுந்த பாடம் புகட்டுவோம். கர்நாடகம் அனைத்து துறைகளிலும் முன் மாதிரியாக திகழ்கிறது என்பதை மறந்துவிடக் கூடாது.மக்கள் விரும்பினால், எங்கள் நடவடிக்கை என்னவாக இருக்கும் என்பதை பொறுத்திருந்து பாருங்கள். கர்நாடகத்தின் மாதிரி என்றால் என்ன என்பதை மற்ற மாநிலங்களுக்கும் தெரிந்து கொள்ளும் வகையில் பாடம் புகட்டுவோம் என்று கடுமையாக பேசினார்.

அதே நேரத்தில் காங்கிரஸ் தலைவர்களின் கோபம் (Fury of Congress leaders) குறித்து பேசிய அவர், நெறிமுறையற்ற காங்கிரஸைப் பற்றி ஏன் பேச வேண்டும். மாநிலத்தில் காங்கிரஸ் பல்வேறு பிரச்னைகளை உருவாக்கி அரசியல் செய்கிறது. காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் டி.கே.சிவகுமார் ஒரு ஊழல் பேர்வழி. அவர் ஊழல் கலாசாரத்தை சேர்ந்தவர். அப்படிப்பட்டவர்கள் பேசும் பேச்சுகளுக்கு எங்கள் அரசு கவலைப்படாது என்றார்.

இதனிடையே எதிர்க்கட்சித்தலைவர் சித்தராமையா மாநில அரசை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

மைசூருவில் செய்தியாளர்களிடம் சித்தராமையா (Siddaramaiah)பேசியது: தென் கன்னட‌ மாவட்டத்தில் தொடரும் இளைஞர்கள் கொலை வழக்குகளில் மாநில அரசின் தோல்வியை எடுத்துக் காட்டுகிறது. பாஜக அரசை செருப்பால் அடிக்க வேண்டும் என்று கூறிய சித்தராமையா உடனடியாக அதனை திரும்பப் பெற்றார். பின்னர் அவர் கூறியது: முதல்வர் பசவராஜ பொம்மைக்கு ஆட்சியை நடத்தும் சக்தி இல்லை.

மாநிலத்தில் அரசு இறந்து போய் உள்ளது. ஆட்சி கட்ட‌மைப்பே முற்றிலும் சீரழிந்துவிட்டது. உத்தரபிரதேசம் போல் நமது மாநிலமும் மாறிவிட்டதா? என்று புரியவில்லை. ஆனால் உத்தரபிரதேசம், பீகார் (Uttar Pradesh, Bihar) போன்று நமது மாநிலமும் மாறிவிட்டதாக‌ பாஜக தலைவர்களே ஒப்புக்கொண்டுள்ளனர். உத்தரப்பிரதேசத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டதா? என்றார்.

மேலும் மாநிலத்தில் தொடர்ந்து கொலைகள் அதிகரித்து வருகின்றன. இதனை தடுப்பதற்கு மாநில உள்துறை அமைச்சர் அரக ஞானேந்திரா தோல்வி அடைந்துள்ளார். எனது தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருந்ததை மக்கள் மறக்கவில்லை என்றார்.என்றார்.