Rahul Gandhi : காந்தியும், பட்டேலும் பிறந்த மண்ணில் கள்ளச்சாராயம் வற்றாத ஆறாக பாய்கிறது: ராகுல்காந்தி

தில்லி: liquor flows like a river : காந்தியும், பட்டேலும் பிறந்த குஜராத் மண்ணில் கள்ளச்சாராயம் வற்றாத ஆறாக பாய்கிறது என்று காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்தார்.

இது குறித்து சுட்டுரையில் (Twitter) அவர் பதிவிட்டுள்ளதாவது: தேசப்பிதா மகாத்மா காந்தியும், இந்தியாவின் இரும்பு மனிதர் சர்தார் வல்ல பாய் பட்டேல் பிறந்த குஜராத் மண்ணில் இப்போது கள்ளச் சாராயம் வற்றாத‌ ஆறாக பாய்கிறது. அங்கு ஆட்சி செய்து வரும் பாஜக அரசு இதனை ஒரு பொருட்டாகவே கருதவில்லை. மக்கள் நலனில் பாஜகவிற்கு அக்கறை இல்லை என்ற பதிவிட்டுள்ளார்.

குஜராத்தில் கள்ளச் சாராயம் அருந்தி இறந்தவர்களின் எண்ணிக்கை 42 ஐ கடந்துள்ளது. இந்நிலையில் பாஜக அரசு (BJP Govt) மீது காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கடுமையாக குற்றம் சாட்டியுள்ளார். காந்தியும், பட்டேலும் பிறந்த குஜராத் மண்ணில் கள்ளச்சாராயம் வற்றாத ஆறாக பாய்கிறது என்று பதிவிட்டுள்ளார்.

குஜராத் மாநிலத்தின் அகமதாபாத், பொடாட் மாவட்டங்களில் (Ahmedabad, Potat districts) கள்ளச்சாராயம் தயாரித்து விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதனை அருந்திய பலர் மயங்கி, விழுந்தனர். மயங்கிய அவர்களை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சைப் பலனின்றி 42 பேர் உயிரிழந்தனர். 97 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக மாநில அரசு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது (The state government has ordered an inquiry). கள்ளச் சாராயம் விற்றதாக இதுவரை 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பிரதமர் மோடி அம்மாநிலத்தின் முதல்வராக இருந்த குஜராத் மாநிலம் அனைத்து துறைகளிலும் முதல் இடத்தில் இருப்பதாக கூறப்பட்டது.

இதனால் குஜராத் மாடலை மற்ற மாநிலங்கள் பின்பற்ற வேண்டும் என்று கூறப்பட்டது. தற்போது அம்மாநிலத்தைச் சேர்ந்த நரேந்திரமோடி (Narendra Modi) நாட்டின் பிரதமராக 2 முறை தேர்வு செய்யப்பட்டுள்ளார். தேசிய அளவில் மிகச்சிறிய மாநிலங்களிலும் கள்ளச்சாராயம் ஒழிக்கப்பட்ட நிலையில், எல்லோரும் உற்று நோக்கும் மாநிலமாக உள்ள குஜராத்தில் கள்ளச்சாராயம் அருந்தி பலர் உயிரிழிந்துள்ளது. அந்த மாநிலத்திற்கு மட்டுமின்றி, பிரதமருக்கு தலை குனிவை ஏற்படுத்தி உள்ளது.

குஜராத்தில் சுற்றுலாவை மேம்படுத்துவதற்காக நாட்டிலேயே உயர்ந்த சிலையான சர்தார் வல்லபாய் பட்டேலின் சிலை (Statue of Vallabhbhai Patel) பிரதமர் மோடி வடிக்கச் செய்தார். காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர் என்றாலும், கட்சி பாகுபாடின்றி, சர்தார் வல்லபாய் பட்டேலின் சிலை வடித்ததற்கு முக்கிய காரணம், அவர் குஜராத்தை சேர்ந்தவர் என்ற பெருமையால், அவரது சிலையை பிரதமர் மோடி வடித்தார்.

சுற்றுலா பயணிகள் அதிகம் வரவேண்டும் என்றால், மாநிலத்தின் அனைத்து துறைகளும் சிறந்து விளங்குவதோடு, சட்டம், ஒழுங்கு (Law and order) பாதுகாப்பும் சிறப்பாக இருக்க வேண்டும். கள்ளச்சாரயம் அருந்தி 42 பேர் உயிரிழிக்கும் வரை அரசின் கவனத்திற்கு கள்ளச்சாராயம் விற்பனை செய்யும் விவகாரம் வராமல் போனது வேடிக்கையாக உள்ளது. எனவே அம்மாநில அரசு உடனடியாக கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்வதை தடுத்து நிறுத்தி, தேசிய அளவில் அனைத்து மாநிலங்களுக்கும் மாதிரியாக திகழ வேண்டும்.

கள்ளச்சாராயம் அருந்தி 42 பேர் இழந்ததை எந்த மாநிலமும் சாதனையாக எடுத்துக் கொள்ளாமல், உடனடியாக அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு கள்ளச்சாராயத்தை அடியோடு ஒழிக்க வேண்டும் (Forgery should be eradicated). காந்தி, பட்டேல் பிறந்த குஜராத்திலும் கள்ளச்சாராயத்திற்கு முற்றுபுள்ளி வைத்து, மாநிலத்திற்கும், பிரதமருக்கும் கௌரவத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதே அம்மாநில மக்களின் கோரிக்கையாக உள்ளது.