Chief Minister should resign : சப்-இன்ஸ்பெக்டர் பணி நியமன ஊழலுக்கு தார்மீக பொறுப்பேற்று முதல்வர், ராஜினாமா செய்ய வேண்டும்: டி.கே. சிவகுமார்

பெங்களூரு: Chief Minister should take moral responsibility and resign : கர்நாடகத்தில் காவல் சப்-இன்ஸ்பெக்டர் பணி நியமன ஊழலுக்கு தார்மீக பொறுப்பேற்று முதல்வர், மத்திய மாநில உள்துறை அமைச்சர்கள் ராஜினாமா செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் டி.கே. சிவகுமார் தெரிவித்தார்.

பெங்களூரு குயின்ஸ் சாலையில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை சட்டப்பேரவைக் எதிர்க் கட்சித் தலைவர் சித்தராமையாவுடன் இணைந்து அவர் செய்தியாளர்களிடம் கூறியது: காவல் சப்-இன்ஸ்பெக்டர் பணி நியமன ஊழல் வழக்கில் தங்கள்கிழமை ஏடிஜிபி அம்ரித் பால் கைது செய்யப்பட்டதையடுத்து, வழக்கை மூடி மறைக்க அரசு முயற்சிக்கிறது. இந்த மோசடிக்கு தார்மீக பொறுப்பேற்று முதலமைச்சர் பசவராஜ் பொம்மையும், உள்துறை அமைச்சர் அரக ஞானேந்திராவும் பதவி விலக வேண்டும். இல்லாவிட்டால், ஆளுநர் மாநில அரசை டிஸ்மிஸ் செய்து, மாநிலத்தின் மானத்தைக் காப்பாற்ற வேண்டும்.

இந்த ஊழல் கர்நாடகத்திற்கு ஏற்பட்டுள்ள‌ ஒரு கரும்புள்ளி. புள்ளி சிறியதாக தோன்றலாம். ஆனால் இது மாநிலத்தின் ஆட்சியையும் கண்ணியத்தையும் கெடுத்து விட்டது. இந்த நேரத்தில் சாமான்ய பொதுமக்களை காப்பாற்றும் நீதித்துறைக்கு வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன். ஆனால் மாநிலத்தில் நீதித்துறைக்கு கூட பாதுகாக்கப்படவில்லை.

545 சப்-இன்ஸ்பெக்டர் பணியிடங்களுக்கு 1.20 லட்சம் இளைஞர்கள் விண்ணப்பித்துள்ளனர். இதில் 52 ஆயிரம் பேர் தேர்வு எழுத தகுதி பெற்றுள்ளனர். சுமார் 300 பணியிடங்களுக்கு சட்டவிரோதமாக நியமிக்கப்பட்டுள்ளனர். சட்ட விரோதமாக சப்-இன்ஸ்பெக்டர் ஆட்சேர்ப்பிற்கு கடை திறக்கப்பட்டது. கடை திறக்கப்பட்டதால், வாங்க இளைஞர்கள் சென்றனர். கடையை திறந்திருக்க‌வில்லை என்றால் இளைஞர்கள் சென்றிருப்பார்களா?. இந்தக் கடை யாருடையது? அதை விசாரிக்க வேண்டும். ஊழலில் ஈடுபட்ட ஒரு சிலரை மட்டும் அரசு கைது செய்துள்ளது. அதில் தொடர்புடைய‌ பெரிய மனித‌ர்களை கண்டு கொள்ளவில்லை.

ஊழல் தொடர்பான‌ விசாரணையில் ஐபிஎஸ் அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் அரை மணி நேரத்தில் விசாரணை முடிக்கப்பட்டது. மற்றொரு வழக்கில், போலீஸ் அதிகாரி ஆலோக்குமாரை நாள் முழுவதும் விசாரணை நடைபெற்றது. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை 50 மணி நேரம் விசாரித்தீர்கள். ஆனால் இந்த வழக்கில் வெறும் அரை மணி நேரத்தில் விசாரணையை முடித்துவிட்டீர்கள். இந்த வழக்கில் சுமார் ரூ. 300 முதல் ரூ. 500 கோடி ரூபாய் வரை ஊழல் நடந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதையெல்லாம் முழுமையாக விசாரிக்காமல் ஐபிஎஸ் அதிகாரியை கைது செய்து விசாரணையை முடிக்கப் பார்க்கிறார்கள்.

இந்த ஊழலுக்கு அரசுதான் முழுக் காரணம். எனவே, இதற்கு தார்மீக பொறுப்பேற்று முதல்வர் பசவராஜ் பொம்மை, உள்துறை அமைச்சர் அரக ஞானேந்திரா ப‌தவி விலக வேண்டும். இல்லாவிட்டால், ஆளுநர், மாநில அரசை டிஸ்மிஸ் செய்ய வேண்டும். இது தொடர்பாக‌ நீதி விசாரணை நடைபெற் வேண்டும். இது குறித்து மக்களவையில் 6 முறை பொய் கூறி, அரசை தவறாக வழிநடத்திய மத்திய உள்துறை அமைச்சர் மீதும் வழக்கு பதிய‌ வேண்டும். அவரும் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்றார்.