Basavaraj Bommai : ஊழல் தடுப்பு படையின் சோதனை தொடர் நடவடிக்கையாகும்: முதல்வர் பசவராஜ் பொம்மை

ஊழல் ஒழிப்பு படை தன் கடமையை செய்கிறது. இதில் காங்கிரஸ் கட்சியினர் குறிக்கிடுவதும் அரசியல் சாயம் பூசுவதும் சகஜம்.

பெங்களூரு : Chief Minister Basavaraj Bommai : ஊழல் தடுப்பு படையின் சோதனை என்பது தொடர் நடவடிக்கையாகும் என்று கர்நாடக முதல்வர் பசவராஜ பொம்மை தெரிவித்தார்.

பெங்களூரில் உள்ள தனது இல்லத்தில் செவ்வாய்க்கிழமை ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். மேலும் நிலுவையில் உள்ள வழக்குகளை ஊழல் ஒழிப்பு படை விசாரிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால், ஊழல் ஒழிப்பு படை நேரம் மற்றும் ஆதாரத்துடன் செயல்பட்டு வருகிறது. இது தொடர் நடவடிக்கையாகும் என்றார்.

ஜமீர் அகமது கான் எம்எல்ஏவின் இல்லத்தில் ஊழல் ஒழிப்பு படையினர் சோதனையில் ஈடுபடும்போது, இல்லத்தின் முன்பு அவரது ஆதரவாளர்கள் போராட்டம் நடத்துவது குறித்து கேட்டப் போது, ​​ஊழல் ஒழிப்பு படை தன் கடமையை செய்கிறது. இதில் காங்கிரஸ் கட்சியினர் குறிக்கிடுவதும் அரசியல் சாயம் பூசுவதும் சகஜம். இதுதான் காங்கிரஸின் கலாசாரம். அவர்கள் வழக்கை திசை திருப்ப ஏதேதோ பேசி வருகின்றனர். அவர்களுக்கு இதைத் தவிர வேறு பணி இல்லை. சோதனையில் ஈடுபட்டுள்ள அதிகாரிகளுக்கு பணியை முடிக்க எந்த இடையூறும் செய்யக்கூடாது என்றார்.

பரப்ப அக்ரஹாரா சிறையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்

பரப்பன அக்ரஹாரா சிறையில் நடக்கும் நடவடிக்கைகளை அரசு தீவிரமாக கவனித்து வருகிறது. அது தொடர்பான தகவல்களை கேட்டறிந்து, உரிய‌ நடவடிக்கை எடுக்கப்படும். பரப்ப அக்ரஹாரா சிறையில் பல்வேறு சம்பவங்கள் அடிக்கடி நடக்கின்றன. சிறையில் உள்ள ஒரு குழு இந்த மாதிரியான காரியத்தைச் செய்வதாகத் தெரிகிறது. சிறையில் நடக்கும் முறைகேடுகள் குறித்து ஆங்கில பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டிருந்தது. சிறை அதிகாரிகள் குற்றவாளிகளுடன் நட்பாக இருப்பதும், முறைகேட்டில் ஈடுபடுவதும் வெளிப்படையாகத் தெரிகிறது. இது தொடர்பான‌ அறிக்கைக்கு பிறகு உரிய‌ நடவடிக்கை மேற்கொள்ள‌ப்படும் என்றார் முதல்வர் பசவராஜ் பொம்மை.