OPS appointed 14 District Secretaries: 14 மாவட்ட செயலாளர்களை நியமித்தார் ஓபிஎஸ்

சென்னை: OPS appointed 14 District Secretaries: ஒற்றை தலைமை பிரச்சனை நடந்து வரும் நிலையில், அதிமுகவின் 14 மாவட்ட செயலாளர்களை ஓ.பன்னீர்செல்வம் நியமித்துள்ளார்.

கடந்த ஜூன் 11ம் தேதி நடைபெற்ற அதிமுகவின் பொதுக்குழு கூட்டத்தில், இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். ஒற்றை தலைமை பிரச்சனையில் ஓ.பன்னீர்செல்வத்துக்கும் எடப்பாடி பழனிசாமிக்கும் கருத்து வேறுபாடு மற்றும் ஆதரவாளர்களிடையே மோதல் ஏற்பட்டது. இதனையடுத்து ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களையும் கட்சியிலிருந்து நீக்குவதாக பொதுக்குழு கூட்டத்திற்குப்பின் அறிவிக்கப்பட்டது.

நேற்று ஓ.பன்னீர்செல்வம் விடுத்துள்ள அறிக்கையில் (O.Panneerselvam Statement), அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திலிருந்து பல்வேறு காரணங்களுக்காக நீக்கப்பட்ட அனைத்து நிர்வாகிகளும் (Party All executives), அவர்களது வேண்டுகோளுக்கிணங்க, மீண்டும் அவரவர் பொறுப்புகளில் செயல்பட அனுமதிக்கப்படுகிறார்கள் என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், இன்று 14 மாவட்ட செயலர்களை நியமிப்பதாக ஓ.பன்னீர் செல்வம் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிவிப்பில்,


ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிதாக நியமிக்கப்பட்டுள்ள மாவட்ட செயலர்களுக்கு கழக உறுப்பினர்கள் முழு ஒத்துழைப்பு கொடுக்கவேண்டும் என்றும் அறிக்கையில் ஓபிஎஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.