TN CM MK Stalin written a letter to PM : உக்ரைனிலிருந்து திரும்பிய மாணவர்கள் எதிர்காலம் குறித்து பிரதமருக்கு, மு.க.ஸ்டாலின் கடிதம்

சென்னை: TN CM MK Stalin written a letter PM Modi : உக்ரைனிலிருந்து திரும்பிய மாணவர்கள் எதிர்காலம் குறித்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பிரதமர் நரேந்திரமோடிக்கு, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார்.

பிரதமர் மோடிக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், ரஷ்யா, உக்ரைன் போருக்குப் பிறகு, உக்ரைனிலிருந்து தமிழகம் திரும்பிய சுமார் 2 ஆயிரம் மருத்துவ மாணவர்களின் (2 thousand medical students) கல்வி பாதிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவிலேயே, தமிழகத்தில் இருந்துதான் அதிகமான மாணவர்கள் மருத்துவக் கல்வி கற்க (To study medical), உக்ரைன் சென்றிருந்தனர். தற்போது அவர்கள் உள்பட பல மாணவர்கள் தமிழகத்திற்கு திரும்பி வந்துள்ளனர்.

உக்ரைனில் இருந்து தமிழகத்திற்கு திரும்பி வந்துள்ள மாணவர்கள் அனைவரும், இந்தியாவில் தங்கள் கல்வியை தொடர அனுமதி வழங்க வேண்டும். ஆனால் மத்திய அரசு (Central government) இது தொடர்பாக உறுதியான நடவடிக்கை எடுக்கவில்லை என்பதால், மாணவர்கள் விரக்தியில் உள்ளனர்.

மாணவர்களின் நலன் காக்க மத்திய அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு, தமிழக அரசு முழு ஒத்துழைப்பு அளிக்கும் (Tamil Nadu Government will give full cooperation). உக்ரைனில் இருந்து இந்தியா திரும்பிய மாணவர்களின் நிலை குறித்து மக்களவையில் அண்மையில் அளிக்கப்பட்ட பதிலால் மாணவர்கள் கவலை அடைந்துள்ளனர் என்று அதில் அவர் தெரிவித்துள்ளார்.