Actor Vishnu Vishal Photo Viral: அரை நிர்வாணத்தில் விஷ்ணு விஷால்; மனைவியே எடுத்த புகைப்படம் வைரல்

சென்னை: Actor Vishnu Vishal in semi-nude Photo Viral: நடிகர் விஷ்ணு விஷாலின் மனைவியே எடுத்த அரை நிர்வாண புகைப்படம் தற்போது வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.

வெண்ணிலா கபடிக்குழு (Vennila Kabadi Kuzhu) படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் விஷ்ணு விஷால். கடந்த 2018ம் ஆண்டு நடித்த ராட்சசன் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் இயக்குனர் மனு ஆனந்த் இயக்கிய எஃப்ஐஆர் (FIR) படமும் நல்ல வெற்றியையும் வசூலையும் தேடித்தந்தது. இதனைத்தொடர்ந்து தற்போது மோகன் தாஸ் படத்தில் நடித்து வருகிறார்.

பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் (Bollywood Actor Ranveer singh) பிரபல வார இதழுக்காக நிர்வாணமாக போஸ் கொடுத்தது திரையுலகினர் பலர் கருத்து தெரிவித்து வரும் நிலையில், அவரது பாணியில் தற்போது விஷணு விஷால் அரைநிர்வாணப் புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில், விஷ்ணு விஷால் மெத்தையில் அரை நிர்வாணமாக இடுப்புப் பகுதிக்கு கீழே வெள்ளை போர்வையை போர்த்தியபடி உள்ளார். நானும் டிரெண்டில் இணைகிறேன் எனவும், மனைவி குட்டஜ்வாலா புகைப்பட கலைஞராக மாறியதும்… என்று குறிப்பிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை ஏராளமானோர் தற்போது விமர்சித்து வருகின்றனர். மேலும் சர்ச்சையையும் ஏற்படுத்தி வருகிறது குறிப்பிடத்தக்கது.