Murugadoss Next Bollywood movie: முருகதாஸ் இயக்கத்தில் அடுத்த பாலிவுட் திரைப்படம்

சென்னை: Next Bollywood movie directed by A.R.Murugadoss: பிரபல திரைப்பட இயக்குனர் முருகதாஸ் மீண்டும் பாலிவுட் படத்தை இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவின் முதன்மை இயக்குனர்களில் ஒருவராக திகழ்பவர் ஏ.ஆர். முருகதாஸ். இவர் முன்னணி நடிகளின் இயக்கி திரைப்பயணத்தில் முக்கிய பங்கு வகிக்கிறார்.

ஆனால் அவர் இயக்கி சமீபத்தில் வெளியான சர்கார், தர்பார் (Sarkar, Durbar) உள்ளிட்ட திரைப்படங்கள் பெரிய அளவிலான வெற்றியை பெறவில்லை. இதனால் இவரின் படங்கள் மீதான ரசிகர்களின் ஆர்வம் குறைந்துகொண்டே வருகிறது என்று சொல்லலாம்.

தர்பார் திரைப்படத்தையடுத்து, நடிகர் விஜய்யின் (Thalapathy65) 65வது திரைப்படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கவிருந்த நிலையில் கை நழுவிப்போனது. அந்த படத்தை இயக்குனர் நெல்சன் (Director Nelson) இயக்கும் வாய்ப்பு கிடைத்தது.

இந்நிலையில் ஏ.ஆர். முருகதாஸின் அடுத்த திரைப்படம் குறித்த பல்வேறு தகவல்கள் இணையத்தில் பரவியது. இதனை உறுதி செய்யும் வகயைில், அவர் அடுத்து மீண்டும் பாலிவுட் திரைப்படத்தை (Bollywood Movie) இயக்க உள்ளார்.

இதில் பாலிவுட் நடிகர்களான ஷாருக்கான் மற்றும் சல்மான் கான் இருவரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. மேலும் அமீர் கானும் அப்படத்தில் கேமியோ கதாபாத்திரத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் விஜய் நடிக்கும் (Actor Vijay) திரைப்படத்தில் வாய்ப்பு கைநழுவிப்போன நிலையில், தற்போது பாலிவுட் ஹீரோக்களின் படத்தை இயக்கும் வாய்ப்பு ஏ.ஆர்.முருகதாசுக்கு கிடைத்துள்ளது.