Ban on affixing Bbmp nameplates : தனியார் வாகனங்களில் பெங்களூரு மாநகராட்சி பெயர் பலகை பொருத்துவதற்கு தடை

பெங்களூரு: Ban on affixing Bbmp nameplates on private vehiclesதனியார் வாகனங்களில் பெங்களூரு மாநகராட்சியின் பெயர் பலகை பொருத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து பெங்களூரு மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: பெங்களூரில் குப்பையை அள்ளுவதற்கு தனியாரிடம் ஒப்பந்தப்புள்ளி (Contract on private) அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் அவர்கள் பயன்படுத்தும் வாகனங்களில் பெங்களூரு மாநகராட்சி என பெயர் பலகை பொருத்தப்பட்டுள்ளது.

இதனால் பல நேரங்களில் அந்த வாகனங்கள் விபத்தை ஏற்படுத்தினால் (If vehicles cause an accident), மாநகராட்சி வாகனங்கள் விபத்தை ஏற்படுத்துகின்றன என ஊடகங்களில் செய்திகள் வருகின்றது. இதனைக் கருத்தில் கொண்டு, மாநகராட்சியின் அனுமதி பெறாமல் யாரும் இனி, தனியார் வாகனங்களில் பெங்களூரு மாநகராட்சி சேவையில் என பெயர் பலகையை பொருத்தக்கூடாது.

அதே போல் மேலும், மாநகராட்சியால் மேற்கொள்ளப்படும் பணிகளுக்கு தேவையான கட்டுமானப் பொருட்களை ஏற்றிச் செல்லும் வாகனங்கள், மாநகராட்சியின் சேவையில் உள்ளதாக (in the service of the Bbmp) அங்கீகரிக்கப்படாத பெயர்ப்பலகையுடன் இயங்கி வருவது கவனிக்கத்தக்கது.

எனவே இனி மாநகராட்சியின் அனுமதி பெறாமல், குப்பை அள்ளும், மாநகராட்சி பணிகளில் பயன்படுத்தப்படும் தனியார் வாகனங்களில், பெங்களூரு மாநகராட்சி சேவையில் என பெயர் பலகையை பொருத்தக் கூடாது. மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் (Strict action will be taken if violated) என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.