Former minister KS Eshwarappa : டிகே சிவக்குமார், சித்தராமையாவிற்கு எதிராக‌ முன்னாள் அமைச்சர் கே.எஸ் ஈஸ்வரப்பா குற்றச்சாட்டு

DK Shivakumar, Siddaramaiah : அன்றைய சில காங்கிரஸ் தலைவர்களின் சூழ்ச்சியால் நாடு பிளவுபட்டது என்று கே.எஸ்.ஈஸ்வரப்பா கூறினார்.

ஷிமோகா: Former minister KS Eshwarappa : மாநில அரசுக்கு எதிராக காங்கிரஸ் நடத்தி வரும் போராட்டம் குறித்து முன்னாள் அமைச்சர் கே.எஸ்.ஈஸ்வரப்பா ஷிமோகாவில் பதிலளித்தார். தங்கள் கட்சி மாநிலத்தில் இருப்பதை காட்ட காங்கிரஸ் என்ன வேண்டுமானாலும் செய்யட்டும். நாங்கள் எதிர்க்கட்சியாக இருந்தபோது பல ஆக்கப்பூர்வ பணிகளை செய்தோம். ஆனால் பாவம் இன்னும் காங்கிரஸ் கட்சி தூங்கிக் கொண்டிருக்கிறது என்று கிண்டல் செய்தார்.

மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுவதற்கு முன்பே (Before the assembly elections) டி.கே.சிவகுமாரும், சித்தராமையாவும் நான் தான் முதல்வர் என்று கூக்குரலிடுகிறார்கள். சித்ரதுர்கா சாதிக்கூட்டத்தில் இருவரும் மோதிக்கொண்டுள்ளனர். இவ்விருவரும் ஒன்றாய் இணைய வேண்டும் என்று அங்கிருந்த மடாதிபதிகள் சொன்னார்கள். ஆனால் முதல்வர் பதவிக்கு தங்களை விட தகுதியானவர்கள் வேறு யாரும் இல்லை என்று இருவரும் கூறி வருகின்றனர். பதவி ஆசையால் இந்த நாடு துண்டாடப்படுகிறது என்று குற்றம் சாட்டினார்.

முழு ஹிந்துஸ்தானையும் ஒன்றாக வைத்திருக்க பல பெரிய மனிதர்கள் அப்போது போராடினார்கள். பாகிஸ்தானாகவும், இந்துஸ்தானாகவும் பிரிவதற்கு ஒரு சிலர் நடுநிலைமை வகித்தனர். அப்போதைய காங்கிரஸின் சில தலைவர்களின் சூழ்ச்சியின் காரணமாகத்தான் நாடு இரண்டாக பிளவுபட்டது (The country was divided into two). பதவி ஆசைக்காக டி.கே.சிவகுமாரும், சித்தராமையாவும் அதே திசையில் பயணிக்கின்றனர் என்றார் அவர்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒப்பந்ததாரர் ஒருவர் தனது தற்கொலைக்கு காரணம், அப்போதைய அமைச்சராக வகித்த கே.எஸ்.ஈஸ்வரப்பாதான் காரணமென்று எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து எதிர்க்கட்சிகளின் வற்புறுத்தலை அடுத்து, பாஜக கட்சியின் மேலிடம் கேட்டு கொண்டதற்கு இணங்க ஈஸ்வரப்பா தான் வகித்து வந்த ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்துராஜ்துறை அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்தார் (resigned from the post of minister).

தற்போது கர்நாடக அமைச்சரவையில் மாற்றம் அல்லது விரிவாக்கம் செய்யப்படும் என கூறப்பட்டு வருவதால், அண்மைக்காலமாக ஈஸ்வரப்பா இது போன்ற அறிக்கைகள், கருத்துகளை கூறி வருகிறார். கட்சியில் எடியூரப்பாவிற்கு இணையாக பாஜகவில் ஈஸ்வரப்பா அனுபவம் வாய்ந்தவர். ஆனாலும் அவர் குருபா சமுதாயத்தை சேர்ந்தவர் என்பதால், அவருக்கு கடந்த ஆட்சியில் முதல்வர் பதவி தராமல், துணை முதல்வர் பதவி வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து தற்போது பாஜக ஆட்சியை பிடித்தப்போது, அவருக்கு துணை முதல்வர் பதவியும் வழங்கப்படவில்லை.

அஸ்வத்நாராயணா போன்றவர்களுக்கு அப்பதவி வழங்கப்பட்டது. அவர்களுக்கு அடுத்தப்படியாக ஈஸ்வரப்பா அமைச்சர் பதவி வகித்தார். எடியூரப்பாவிற்கு அடுத்து, பசவராஜ் பொம்மை முதல்வராக பதவி ஏற்றார் (Basavaraj bommai took charge as the Chief Minister). அவரது தலைமையின் கீழும் ஈஸ்வரப்பா அமைச்சராக்கப்பட்டார். கட்சிக் கட்டுப்பாடு என்று கூறி அதனையும் ஏற்றுக் கொண்ட அவர், தற்போது அந்த பதவியும் பறிபோனதால், மூத்த தலைவரான ஈஸ்வரப்பா அண்மைக்காலமாக இது போன்று அவ்வப்போது கருத்து, அறிக்கைகளை வெளியிட்டு வருகிறார். இருப்பினும் அவருக்கு அமைச்சர் பதவியை வழங்காமல் பாஜக மேலிடத் தலைவர்கள் கால தாமதம் செய்து வருகின்றனர். சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்பு தனக்கு அமைச்சர் பதவி வழங்கப்படும் என்ற ஆர்வத்தில் ஈஸ்வரப்பா உள்ளார்.