Ganesha Chaturthi in School : பள்ளியில் விநாயகர் சதுர்த்தி: கர்நாடக அமைச்சர் அறிவிப்பு

Ganesha Chaturthi in School : இந்து மதத்தில் ஒவ்வொரு மாதத்திற்கும் ஒரு சிறப்பு முக்கியத்துவம் உண்டு. ஒவ்வொரு மாதமும் ஏதாவது ஒரு தெய்வத்திற்கு அர்ப்பணிக்கப்படுகிறது. அந்த மாதத்தில் அந்த தெய்வங்கள் வழிபடப் படுகின்றன. இந்த ஆண்டு விநாயக சதுர்த்தி ஆகஸ்ட் 31, புதன்கிழமை. புதன்கிழமை என்பதால் விநாயக சதுர்த்தியின் முக்கியத்துவம் அதிகரிக்கிறது.

கர்நாடக மாநில பள்ளிகளில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்களுக்கு அனுமதி வழங்குவது குறித்து கர்நாடக கல்வி அமைச்சர் பிசி நாகேஷின் (Karnataka Education Minister BC Nagesh) கருத்துக்கு முஸ்லிம் சமூகத்தில் ஒரு பிரிவினர் கண்டனம் தெரிவித்துள்ளனர். “பள்ளிகளில் விநாயகர் பண்டிகையை கொண்டாட சுதந்திரம் உள்ளது. முதன்முறையாக அதை கொண்டாட‌ (celebrate) செய்ய விரும்புவோருக்கு நாங்கள் வேண்டாம் என்று சொல்ல மாட்டோம். இது சமுதாயத்தை ஒன்றிணைக்கும் செயல் மட்டுமே. பள்ளிகளில் விநாயகர் சதுர்த்தியை கொண்டாட விரும்பவர்கள் எங்கள் அனுமதியைப் பெறலாம்” என்று அமைச்சர் தெரிவித்தார்.

அமைச்சரின் கருத்துக்கு எஸ்டிபிஐ (SDPI) மாவட்ட செயற்குழு உறுப்பினர் உமர் ஃபாரூக் மாநில அரசைக் குறி வைத்து கூறியது. கல்வி நிறுவனங்களுக்குள் ஹிஜாப் அனுமதிக்கப்படாத போது, ​​ஏன் இந்து பண்டிகைக்கு மட்டும் அனுமதி அளிக்கப்படுகிறது?. மதம் என்பது தனிப்பட்ட பிரச்சினையாகும். கல்வி அமைச்சர் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரின் மத நிகழ்வுகளை அனுமதிக்கும் போது, ​​மற்றவர்களையும் அனுமதிக்க வேண்டிய கடமை அவருக்கு உள்ளது என்றார்.

விநாயகர் சதுர்த்தி (Ganesha Chaturthi):

விநாயகர் சதுர்த்தி விநாயகருக்கு அர்ப்பணிக்கப்பட்ட நாளாகும். அந்த நாளில் விநாயகர் சதுர்த்தி என்பதால் விரதம் இருப்பது மிகவும் சிறப்பு வாய்ந்தது. விநாயக சதுர்த்தி அன்று வீடுகளில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு வணங்கப்படுகிறது. விநாயகர் சிலைகள் 10 நாட்கள் வீட்டில் வைத்து வழிபடுகின்றனர். பஞ்சாங்கத்தின்படி, இம்முறை விநாயக சதுர்த்தி விழா ஆக. 31ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. சதுர்த்தி திதி ஆக. 30 ஆம், செவ்வாய்கிழமை மாலை 03.33 மணிக்கு தொடங்குகிறது. இது ஆக. 31 ஆம் தேதி பிற்பகல் 03.22 மணிக்கு முடிவடையும். சூரிய உதயத்தை முன்னிட்டு ஆக. 31 ஆம் தேதி விநாயக சதுர்த்தி விரதம் கடைப்பிடிக்கப்படும். அன்று காலை 11.05 மணி முதல் மதியம் 01.38 மணி வரை வழிபாடு செய்ய உகந்த நேரம் என கணிக்கப்பட்டுள்ளது.