Kumble to be sacked as Punjab coach: பஞ்சாப் அணியின் பயிற்சியாளர் பதவியில் இருந்து அனில் கும்பளே நீக்கம்

புதிய பயிற்சியாளருக்கான வேட்டையில் உள்ள பஞ்சாப் அணி, இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் இயான் மோர்கன் (Eoin Morgan)மற்றும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் பயிற்சியாளர் ட்ரெவர் பெய்லிஸ் ((Trevor Bayliss)) மற்றும் இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி (Ravi Shastri) மீது கவனம் செலுத்துகிறது.

பெங்களூரு: சுழற்பந்து வீச்சாளர் அனில் கும்பளேவுக்கு (Anil Kumble) அதிர்ச்சி தகவல். ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக இருக்கும் கும்ப்ளேவை நீக்க பஞ்சாப் அணி முடிவு செய்துள்ளது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ முடிவு இன்னும் சில நாட்களில் வெளியாக உள்ளது.

2020 ஆம் ஆண்டு பஞ்சாப் கிங்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக அனில் கும்ப்ளே (Punjab Kings Coach) நியமிக்கப்பட்டார். பஞ்சாப் அணி கும்பளேயின் பயிற்சி மூலம் மூன்று ஆண்டுகளில் மொத்தம் 42 போட்டிகளில் விளையாடி 19 போட்டிகளில் மட்டுமே பஞ்சாப் கிங்ஸ் அணி வெற்றி பெற்றது. கும்பளே பயிற்சியாளராக இருந்த காலத்தில், பஞ்சாப் அணியை இரண்டு கேப்டன்கள் வழி நடத்தினர், ஆனால் பிளேஆஃப்களுக்கு செல்லவில்லை. 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில், கேஎல் ராகுல் பஞ்சாப் அணியின் கேப்டனாக இருந்தார், அதே நேரத்தில் கர்நாடகத்தைச் சேர்ந்த மற்றொருவர் மயங்க் அகர்வால் பஞ்சாப் கிங்ஸ் அணியை வழி நடத்தினார்.

பஞ்சாப் கிங்ஸ் அணியின் பயிற்சியாளராக அனில் கும்பளேவின் மூன்று ஆண்டு ஒப்பந்தம் இந்த ஆண்டுடன் முடிவடைந்தது. கும்பளேயின் பயிற்சியின் கீழ் மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறையாவது பிளே-ஆஃப் (Play-off) சுற்றுக்கு அணி செல்லாமல் தோல்வியடைந்ததால், கும்ப்ளேவை பயிற்சியாளராக தொடர வேண்டாம் என்று பஞ்சாப் அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

புதிய பயிற்சியாளருக்கான வேட்டையில் உள்ள பஞ்சாப் அணி, இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் இயான் மோர்கன் மற்றும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் பயிற்சியாளர் ட்ரெவர் பெய்லிஸ் மற்றும் இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி ( (Ravi Shastri)) மீது கவனம் செலுத்துகிறது. அதோடு, பஞ்சாப் கிங்ஸின் பார்வையும் அவர்களில் ஒருவரின் மீது விழுந்துள்ளது. இதற்கான பேச்சுவார்த்தை இறுதிக்கட்டத்தில் உள்ளதால், அடுத்த இரண்டு வாரங்களில் பஞ்சாப் அணிக்கு புதிய பயிற்சியாளர் நியமிக்கப்பட வாய்ப்புள்ளது.

2016-ம் ஆண்டு இந்திய அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்ட அனில் கும்பளே, ஒரே ஆண்டில் ராஜினாமா செய்தார். அணித் தலைவர் விராட் கோஹ்லி (Virat Kohli) மற்றும் வீரர்களுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கும்பளே ராஜினாமா செய்ததாக கூறப்பட்டது. தற்போது பஞ்சாப் அணியும் கும்பளேவை பயிற்சியாளர் பதவியிலிருந்து நீக்க‌ முடிவு செய்துள்ளது. 2008 முதல் பஞ்சாப் கிங்ஸ் அணி ஐபிஎல் பட்டத்தை வெல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.