DK Shivakumar : மாநிலத்தில் 511 கி.மீ தூரம் நடைபயணம் மேற்கொள்கிறார் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி : டி.கே.சிவகுமார்

பெங்களூரு : Rahul Gandhi will walk 511 km in the state : காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, கர்நாடகத்தில் 511 கி.மீ தூரம் நடைபயணம் மேற்கொள்கிறார் என்று மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார் தெரிவித்தார்.

இது குறித்து செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியது: காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கன்னியாக்குமரி முதல் காஷ்மீர் வரை (Kanyakumari to Kashmir) மத்திய அரசின் தோல்விகளை கண்டித்து பாத யாத்திரை செப். 7 ஆம் தேதி முதல் தொடங்க உள்ளார். அவர் கர்நாடக மாநிலத்தில் 511 கி.மீ பாதயாத்திரை 21 நாட்கள் மேற்கொள்ள உள்ளார். பாதயாத்திரையில் அவர் எங்கெல்லாம் செல்ல வேண்டும். நாள் ஒன்றுக்கு எத்தனை கி.மீ நடக்க வேண்டும் என்பதனை கவனத்தில் வைத்து விவாதித்து வருகிறோம். செப். 7-ஆம் தேதி முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் சமாதியில் வணங்கி விட்டு, அதனைத் தொடர்ந்து கன்னியாக்குமரியில் செப். 7-ஆம் தேதி பாத யாத்திரையை தொடங்க உள்ளார்.

பாத யாத்திரையின் போது வழியில் சில இடங்களில் வனப்பகுதிகள் வருகின்றன. அந்தப் பகுதிகளில் பாத யாத்திரை மேற்கொள்வதா வேண்டாமா என்பது குறித்து போலீசாருடன் ஆலோசித்து, தில்லியில் உள்ள குழு இது குறித்து முடிவு எடுக்கும். ராகுல்காந்தியுடன் காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவர்களும் பாதயாத்திரையில் கலந்து கொள்ள உள்ளனர் (National leaders of the Congress party are also expected to participate in the walk). மாநிலத்தில் உள்ள தலைவர்கள் யாரெல்லாம் பாத யாத்திரையில் கலந்து கொள்ள உள்ளனர் என்ற தகவல் விரைவில் தெரிவிக்கப்படும். மாநிலத்தில் 8 மாவட்டங்கள் வழியாக பாதயாத்திரை நடைபெறும். பெல்லாரியை தவிர்த்து, சித்ரதுர்கா, தும்கூரு, மண்டியா, சாம்ராஜ்நகர், மைசூரு ஆகிய மாவட்டங்களுக்கு சென்று பாதயாத்திரை நடைபெற உள்ள இடங்களை பரிசீலித்துள்ளேன். ராகுல்காந்தி பாதயாத்திரையில் மாநிலத்தில் உள்ள காங்கிரஸ் தொண்டர்கள் அனைவரும் பங்கேற்க உள்ளனர்.

நாடு முழுவதும் உள்ள 600க்கும் மேற்பட்ட காங்கிரஸ் தலைவர்கள், பாத யாத்திரையின் போது மேற்கொள்ள உள்ள பிரசாரம் குறித்தும், அமைதி, நல்லிணக்கம் மற்றும் இந்தியாவை ஒன்றிணைக்கவும், மக்கள் பிரச்னைகள் உள்ளவை குறித்து விவாதித்து வருகின்றனர் என்றார். ராகுல்காந்தி பயணத்தின் போது தேசிய அளவில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு குறித்து, சம்பந்தப்பட்ட மாநில போலீசார், ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர். ராகுல்காந்தியின் கன்னியாக்குமரி முதல் காஷ்மீர் வரையிலான பாத யாத்திரை வெற்றி பெற்ற தேசிய, மாநிலம், மாவட்ட அளவிலான காங்கிரஸ் கட்சியினரும் தொடர்ந்து ஆலோசனை (The Congress party also continued to consult) மேற்கொண்டு வருகின்றனர்.