MoU with National Health Authority tomorrow: 3ம் பாலினத்தவர்களுக்கான சுகாதார திட்டம்: நாளை புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து

புதுடெல்லி: Ministry of Social Justice and Empowerment will be signing an MoU with National Health Authority tomorrow: மூன்றாம் பாலினத்தவர்களுக்கு சுகாதாரத் திட்டம் வழங்க புரிந்துணர்வு ஒப்பந்தம் நாளை கையெழுத்தாகிறது.

மூன்றாம் பாலினத்தவர்களுக்கான ஒருங்கிணைந்த சுகாதாரத் திட்டத்தை வழங்குவது குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறையும், தேசிய சுகாதார ஆணையமும் கையெழுத்திட உள்ளன. புதுடெல்லி டாக்டர் அம்பேத்கர் சர்வதேச மையத்தின் நாளந்தா கலையரங்கில் மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் டாக்டர் வீரேந்திர குமார் மற்றும் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா முன்னிலையில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது.

நாட்டிலேயே முதன்முறையாக இந்த இரு அமைச்சகங்கள் எடுத்துள்ள இந்த முன் முயற்சியானது, நமது சமுதாயத்திற்கு புதிய பாதையை அளிப்பதோடு, மூன்றாம் பாலினத்தவர்கள் உரிமை, மரியாதையுடன் சமூகத்தில் சிறப்பான இடத்தை வழங்குகிறது.

இந்த திட்டத்தில் பயன்பெற இந்திய அரசு வழங்கியுள்ள மூன்றாம் பாலினத்தவருக்கான சான்றிதழ் மற்றும் மூன்றாம் பாலினத்தவருக்கான தேசிய தளத்தால் வழங்கப்பட்டுள்ள அடையாள அட்டையை வைத்திருக்க வேண்டும். மேலும், மத்திய, மாநில அரசுகளால் வழங்கப்பட்டுள்ள இதுபோன்ற திட்டத்தால் பயனடையாத மூன்றாம் பாலினத்தவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம்.

210.31கோடியைக் கடந்த கொரோனா தடுப்பூசி எண்ணிக்கை:
இந்தியாவில் கொவிட்-19 தடுப்பூசியை பொறுத்தவரை இன்று காலை 7 மணி நிலவரப்படி 210.31 கோடிக்கும் அதிகமான (2,10,31,65,703) டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன 2,79,87,316 அமர்வுகள் மூலம் இந்த சாதனை படைக்கப்பட்டுள்ளது. 12-14 வயதிற்குட்பட்டோருக்கான கொவிட்-19 தடுப்பூசி, 16 மார்ச் 2022 முதல் செலுத்தப்பட்டு வருகிறது. இதுவரை, ஏறத்தாழ 4 கோடிக்கும் அதிகமான (4,00,16,064) இளம் பருவத்தினருக்கு கொவிட்-19 தடுப்பூசியின் முதல் டோஸ் செலுத்தப்பட்டுள்ளது. 18-59 வயதுடையவர்களுக்கு கொவிட்-19 முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி செலுத்தும் பணி 10 ஏப்ரல் 2022 அன்று தொடங்கியது.

இந்தியாவில் தற்போது சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 96,506 மிகக் குறைவாக உள்ளது. நாட்டின் மொத்த நோய் தொற்று உள்ளவர்கள் தற்போது 0.22 சதவீதமாக உள்ளனர். இதை தொடர்ந்து இந்தியாவில் குணமடைந்தோர் விகிதம் 98.59 சதவீதமாக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 9,680 பேர் குணமடைந்துள்ளனர். பெருந்தொற்றின் தொடக்கத்திலிருந்து இதுவரை குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 4,37,33,624. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 8,586 புதிய நோயாளிகள் பதிவு செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில் 3,91,281 கொவிட் பரிசோதனைகள் செய்யப்பட்டன. இதுவரை மேற்கொள்ளப்பட்ட மொத்த பரிசோதனைகளின் எண்ணிக்கை 88.31 கோடி (88,31,16,790) வாராந்திரத் தொற்று 3.31 சதவீதமாக உள்ளது. தினசரித் தொற்று விகிதம் 2.19 சதவீதமாக பதிவாகியுள்ளது.