Union Minister  Pralhad Joshi  : தனியார் தொழில் முனைவோரை ஈர்க்க மத்திய அரசு தொடர்ந்து முயற்சி : மத்திய அமைச்சர் பிரலாத் ஜோஷி

தில்லி: The central government is constantly trying to attract private entrepreneurs ; கனிம ஆய்வில் அதிக தனியார் தொழில்முனைவோரை ஈர்க்க மத்திய அரசு தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது என்று மத்திய நிலக்கரி, சுரங்கங்கள் மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பிரலாத் ஜோஷி தெரிவித்தார்.

என்எம்டிசி லிமிடெட், ஸ்டீல் அமைச்சகம், சுரங்க அமைச்சகம் மற்றும் எஃப்ஐசிசிஐ ஆகியவற்றால் ஏற்பாடு செய்யப்பட்ட “இந்திய கனிமங்கள் மற்றும் உலோகத் தொழில் – 2030 (Indian Minerals and Metals Industry – 2030) மற்றும் பார்வை 2047 நோக்கிய மாற்றம்” என்ற தலைப்பில் இன்று நடைபெற்ற இரண்டு நாள் சர்வதேச மாநாட்டில் பங்கேற்று அவர் பேசியது: ட்ரோன்கள் மற்றும் பிற சமீபத்திய தொழில்நுட்பங்களை மேம்படுத்துவதன் மூலம் சுற்றுச்சூழல் பாதிப்பு இல்லாமல் கனிம ஆய்வு மேற்கொள்ளப்படும்.வணிக நிலக்கரிச் சுரங்கம் மூலம் ரூ.25 ஆயிரம் கோடிக்கு ஏலம் விடப்படுவதாக கூறினார்.

கடந்த ஆண்டு சுரங்கத் துறையில் கூடுதல் வருவாய் ஈட்டப்பட்டது. ஒடிசா மாநிலம் வருவாய் ஈட்டுவதில் முதலிடத்தில் உள்ளது. புதிய யுக தாதுக்கள் ஆய்வில் கவனம் செலுத்துமாறு இந்திய புவியியல் ஆய்வு மையத்திற்கு (GSI) அமைச்சர் அழைப்பு விடுத்தார். சுரங்கத் துறையில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட சில சீர்திருத்தங்கள் காரணமாக‌, கடந்த நிதியாண்டில் 89 மில்லியன் டன்னாக இருந்த நிலக்கரி உற்பத்தி இந்த ஆண்டு 140 மில்லியன் டன்னாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிதியாண்டில் மொத்த நிலக்கரி உற்பத்தி 900 மில்லியன் டன்னாக இருக்கும் (Total coal production will be 900 million tonnes) என்று அமைச்சர் தெரிவித்தார்.

கனிம ஆய்வுக்கு மேலும் ஊக்கமளிக்கும் வகையில், தேசிய கனிம ஆய்வு அறக்கட்டளை (NMET) ஒரு தன்னாட்சி அமைப்பாக மாற்றப்பட்டுள்ளது என்று அமைச்சர் மேலும் கூறினார். தனது சமீபத்திய வெற்றிகரமான ஆஸ்திரேலியா பயணத்தை நினைவுக் கூர்ந்த அமைச்சர் பிரலாத் ஜோஷி, ஆஸ்திரேலியாவுடன் ஒப்பிடும்போது நமது கனிம ஆய்வுகள் குறைந்த பரப்பளவில் மட்டுமே நடைபெறுகின்றன என்றார்.

சமீபத்திய புதுமையான முயற்சிகள் மற்றும் சட்டங்கள் விதிகளில் திருத்தங்கள் (Innovative and amendments to laws and regulations) ஆகியவற்றின் விளைவாக, கடந்த ஏழு ஆண்டுகளில் 190 பெரிய கனிமத் தொகுதிகள் ஏலம் விடப்பட்டுள்ளன. வணிகரீதியான நிலக்கரிச் சுரங்க ஏலம் ஒரு பெரிய வெற்றி என்பதைச் சுட்டிக்காட்டிய அமைச்சர், பொதுத்துறை நிறுவனங்களை ஒதுக்கப்பட்ட நிலக்கரிச் சுரங்கங்களில் இருந்து உற்பத்தியை விரைவில் தொடங்க வேண்டும் என்றும், இல்லையெனில் மறு ஏலத்திற்காக அமைச்சகத்திடம் ஒப்படைக்க‌லாம் என்றும் அமைச்சர் வலியுறுத்தினார்.