Chief Minister Basavaraj bommai : குடியரசு தலைவர் வேட்பாளர் திரௌபதி முர்மு அறுதி பெரும்பான்மையுடன் வெற்றி பெறுவார்: முதல்வர் பசவராஜ் பொம்மை

பெங்களூரு : Draupadi Murmu will win with a majority: தேசிய ஜனநாயக கூட்டணியின் குடியரசு தலைவர் வேட்பாளரான திரௌபதி முர்முவுக்கு பல அரசியல் கட்சிகள் ஆதரவு அளித்து வருவதால், அவர் மூன்றில் இரண்டு பங்கு வாக்குகள் பெற்று பெரும்பான்மையுடன் வெற்றி பெறுவார் என்று முதல்வர் பசவராஜ் பொம்மை கூறினார்.

பெங்களூரு விதானசௌதாவில் திங்கள்கிழமை குடியரசு தலைவருக்கான தேர்தலில் வாக்களித்த பின்னர் அவர் செய்தியாளர்களிட ம் கூறியது: குடியரசு தலைவருக்கான தேர்தலில் தனது வெற்றி வித்தியாசத்தை, முந்தைய அனைத்து சாதனைகளையும் முறியடிப்பதற்கான வாய்ப்புகள் திரௌபதி முர்முவுக்கு உள்ளது. திரௌபதி முர்மு உன்னத மனிதநேய விழுமியங்களின் உருவம். அவர் இந்திய குடியரசுத் தலைவர் பதவிக்கு வருவது நாட்டின் ஜனநாயகத்தின் எதிர்காலத்திற்கு நல்லது (Good for the future of democracy).

குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தில்லியில் உள்ள நாடாளுமன்றம் தொடங்கி, மாநிலங்களவை வரை நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. தேசிய ஜனநாயக கூட்டணியின் உள்ள‌ கட்சிகளைத் தவிர, முர்மு பல கட்சிகளின் ஆதரவையும் பெற்றுள்ளார்.

அவர் ஒரு திறமையான நிர்வாகி. நகராட்சி துணைத் தலைவர், சட்டப்பேரவை உறுப்பினர், மாநில அமைச்சர் மற்றும் ஆளுந‌ர் என பணிகளை செய்துள்ள‌ அவரது பங்களிப்பு பாராட்டத்தக்கது. பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த (Belongs to tribal community) அவர், நாட்டின் உயரிய பதவிக்கு வருவது பெருமைக்குரிய தருணம்.

தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தலைவர் என்ற முறையில் பிரதமர் நரேந்திர மோடி (Prime Minister Narendra Modi), குடியரசுத் தலைவர் பதவிக்கு தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளராக திரௌபதி முர்முவை தேர்ந்தெடுத்ததன் மூலம் தேசமே பெருமையடைகிறது.

மேலும் தொகுக்கப்பட்ட மற்றும் பிராண்டட் செய்யப்பட்ட பால் மற்றும் தயிர் மீது 5 சதம் ஜிஎஸ்டி விதிக்கப்பட்டுள்ளது. இதனை விரைவில் திரும்பப் பெறலாம். எனவே தற்போதைக்கு விற்பனையாளர்கள் பாலின் விலையை உயர்த்த வேண்டிய அவசியம் இல்லை. ஜிஎஸ்டி கவுன்சிலில் விவாதித்த பிறகு (After discussion in GST Council) திரும்பப் பெறுவது தொடர்பான‌ தகவல் தெரிவிக்கப்படும் என்றார்.