Heavy Rainfall : தெலுங்கானா உள்ளிட்ட சில மாநிலங்களில் அடுத்த 5 நாள்களுக்கு கனமழை: இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

தில்லி: Heavy Rainfall Alert for next 5 days :அடுத்த 5 நாள்களுக்கு சத்தீஸ்கர், விதர்பா, மத்தியப் பிரதேசம், ஒடிசா, கொங்கன், கோவா, கேரளா, மாஹே, கர்நாடகம், தெலுங்கானா மற்றும் லட்சத்தீவுகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) தெரிவித்துள்ளது.

சனிக்கிழமை காலை போர்பந்தர் கடற்கரையில் இருந்து 100 கிமீ மேற்கே காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானதால், அது வலுவிழந்து அடுத்த 48 மணி (next 48 hours) நேரத்தில் ஓமன் கடற்கரையை நோக்கி மேற்கு பக்கமாக‌ நகர்ந்து செல்லும்.

மேலும், கனமழை எச்சரிக்கை வடக்கு ஒடிசா மற்றும் அதையொட்டி உள்ள‌ பகுதிகளுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மத்திய பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் மாநிலத்தில் ஜூலை 21-ஆம் தேதி வரை கனமழை பெய்யக்கூடும். ஜூலை18 மற்றும் 19-ஆம் தேதிகளில் கடலோர கர்நாடகத்திலும், ஜூலை 18-ஆம் தேதி தெற்கு கர்நாடகத்தின் உள் பகுதி, கொங்கன் மற்றும் கோவா, கேரளா மற்றும் மாஹே, குஜராத் (Gujarat), மராத்வாடா, விதர்பா ஆகிய பகுதிகளிலும், தெலுங்கானாவில், ஜூலை 20-ஆம் தேதி வரை கன மழை பெய்யக்கூடும்.

ஜூலை 19-ஆம் தேதிய‌ன்று மேற்கு மத்தியப் பிரதேசத்தில் மிக அதிக அளவில் கன‌மழை பெய்யக்கூடும். மத்திய மகாராஷ்டிரா, மராத்வாடா, கடலோர ஆந்திரா, யானம் மற்றும் தெலுங்கானா (Telangana)ஆகிய பகுதிகளில் அடுத்த 5 நாட்களுக்கு பரவலாக மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த 5 நாட்களுக்கு ராயலசீமா, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் கனமழை எச்சரிக்கையும், தமிழகத்தில் 19-ஆம் தேதி கனமழை பெய்யும். ஜூலை 21-ஆம் அடுத்த 3 நாட்களில் ஜம்மு மற்றும் காஷ்மீர் (Jammu and Kashmir), ஹிமாச்சலப் பிரதேசம் மற்றும் உத்தரகண்ட் ஆகிய மாநில‌ங்களில் பரவலாக இடியுடன் கூடிய மிதமான மழை அல்லது கன‌ மழை பெய்யக்கூடும்.

இமாச்சலப் பிரதேசம் ஜூலை 20 ஆம் தேதி, உத்தரகாண்ட் ஜூலை 19 முதல் 21 வரை அதிக மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பஞ்சாப், ஹரியானா, சண்டிகர் (Chandigarh), தில்லி மற்றும் உத்தரபிரதேசம் ஆகிய பகுதிகளில் அடுத்த 3 நாட்களுக்கு இடியுடன் கூடிய மழை பெய்யும். மேலும் ஜூலை 19 முதல் 21 வரை பல்வேறு மாநிலங்களில் இடியுடன் கூடிய மழை பரவலாக பெய்ய வாய்ப்புள்ளது.