Chennai High court : வன்முறையில் ஈடுபட்டவர்களை தனிப்படை அமைத்து அடையாளம் காணுங்கள் : உயர்நீதிமன்றம்

சென்னை: School girl suicide case : பள்ளி மாணவி தற்கொலை விவகாரத்தில் வன்முறையில் ஈடுபட்டவர்களை தனிப்படை அமைத்து அடையாளம் காணுங்கள் என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலம் அருகே உள்ள கனியாமூரில் பிளஸ் 2 மாணவி ஸ்ரீமதி, உயிரிழந்தது தொடர்பாக ஞாயிற்றுக்கிழமை அமைதியான முறையில் நடைபெற்ற போராட்டம், வன்முறையாக மாறி கலவரம் வெடித்தது (riot broke out). வன்முறையில் தனியார் பள்ளியில் இருந்த சான்றிதழ் உள்பட வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டது.

இந்த நிலையில் திங்கள்கிழமை மாணவி ஸ்ரீமதியின் தந்தை ராமலிங்கம் (student’s father is Ramalingam} உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது நீதிபதி சதீஷ்குமார், நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து விட்டு, போராட்டத்தில் ஈடுபட்டது ஏன் என்று கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதில் அளித்த ராமலிங்கம், போராட்டத்தில் அப்பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவர்கள் ஈடுபட்டனர். போராட்டத்திற்கும் எங்களுக்கு எந்த சம்பந்தமும் இல்லை என்றார்.

இதனையடுத்து பள்ளியின் வாகனங்களையும், மாணவர்களின் சான்றிதழ்களை எரித்ததற்கு யார் உரிமை தந்தார்கள். போராட்டத்திற்கு அனுமதி அளித்தது யார்?. வன்முறையில் ஈடுபட்டவர்களை தனிப்படை அமைத்து அடையாளம் காண வேண்டும் என்று நீதிபதி சதீஷ்குமார் (Justice Satish Kumar) தெரிவித்தார்.

மாணவி தற்கொலை குறித்து சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். மாணவி எழுதி வைத்தாக கூறப்படும் கடிதம் கிடைத்துள்ளது என்று அரசு தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.